பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி இ!

ஆங்கிலம் மட்டும் படிக்கிறவர்கள் மற்ற சனங்களுடன் சேராமல், தாங்கள் ஒரு அந்நிய தேசத்தால் போல சீவிக்கிறார்கள்.

அறியாமையும் ஒரு அந்தகாரமே!

இந்தத் தேசத்துப் பெரிய பிரபுக்கள், மிராசுதாரர்கள், முதலானவர்களுடைய அறியாமையை நினைக்கும் போது, நமக்குப் பிரபலமும் பெருமூச்சும் உண்டாகின்றன. அவர்களிலே அநேகர் சுத்த நிரட்சர குட்சிகளாய் இருக்கின்றார்கள்.

சிலர் கையெழுத்துக்களை மட்டும் கற்றுக் கொண்டிருக் கிறார்கள். சிதம்பரம் என்பதற்குச் செலம்பாம் என்றும் துரைசாமி என்பதற்கு தொறைசாமி என்றும் வைத்தியலிங்கம். என்பதற்கு வயித்துலிங்கம் என்றும் கையெழுத்து வைக்கிறார்கள். இந்த வித்துவ சிரோன் மனிகளே ஜூரிகளாகவும், முனிசிபல் மெம்பர்களாகவும், பென்சு மாஜிஸ்ரேட்டுகளாகவும், தேவாவய, தர்மாலய விசாரணைக் கர்த்தர்களாகவும். நியமிக்கப்படுகிறார்கள்.

அதிகாரத் தான்ங்களில் இவர்கள் பிரதிமைகளைப் போல நாற்காலிகளில் வீற்றிருக்கிறார்கள். அவர்களுடைய வேலை இன்னது என்பதை அவர்களே அறியார்கள். பிரதிமைகளுக்கும் இவர்களுக்கும் பேதம் என்னவென்றால், பிரதிமைகள் அசையாமல் இருக்கின்றன. இவர்கள் நாற்காலியில் அமர்ந்து அசைந்து கொண்டிருக்கின்றார்கள்.

தாய்மொழியில் பற்றுதல் வேண்டும், அதனை ஆர்வமுடன் ஆராய வேண்டும். ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய ராச மொழிகளைப் படிக்கிறவர்கள், தேச மொழிகளையும் தீர்க்கமாக உணர்ந்து இந்த தேசத்தைச் சூழ்ந்திருக்கிற அறியாமை என்னும் அந்தகாரம் நீங்கும்படி, வசன காவியங்கள் என்னும் ஞான தீபங்களை ஏற்றுவார்கள் என்றும் நம்புகிறோம்