பக்கம்:மீனோட்டம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூசி 27 இன்ஸ்பெக்டர் அய்யா பிள்ளே” என்று பரிச்சியம் வேறே பண்ணி வைத்தார்-’ "அப்பொழுது நீ என்னைப் பார்த்து புன்னகை புரிந்தாய். மேக்கப் மேசையண்டை நின்று கொண்டிருந்தாய். அப்போதுதான் மேடையிலிருந்து வந்திருந்தாய் லேசாய்த் திணறிக் கொண்டிருந்தாய்-’’ ‘வெற்றியும் தாங்குவது சிரமந்தான். ஆகையால் திணறி யிருக்கலாம்-’ 'அந்த நிமிஷம் வெகு அழகாயிருந்தாய்-’ 'எனக்கு வெக்கமாயிருக்கே!-’ என்று கேலியாய் முன்றானையை வாய்மேல் போட்டு மூடித்தலையைக் குனிந்து கொண்டாள். ஆனால் அதற்கப்புறம் இல்லையா?” என்றாள் அடுத்தபடியாக. "ஆனால் அந்தச் சமயமே வேறு.” "அப்படியானால் அது சமயத்தின் அழகுபோலும்! என் அழகு இல்லையாக்கும்!” 'என்னைக் கவிழ்த்த அழகு-அன்று என் தூக்கத்தையும் மறுநாள் என் பசியையும் கெடுத்தாய். உன்னையே நினைத்துக் கொண்டு எங்கே போகிறோம் என்று கூடத் தெரி யாமல், திகைப்பூண்டு மிதித்தவன் போல் சுற்றினேன்' எனறான. ‘நானும்தான் சுற்றினேன். ஊரை வேடிக்கை பார்க்க-’ என்றாள். ஊர் ஊராய்த் திரிபவர்களுக்கு, ஒவ்வொரு ஊரும் வேடிக்கை-’ அவள் சொல்வதையே கேளாதவன் போல், "நான் ஊர்த் தோப்புள் நுழைந்தேன்-’’ 'நானும் நுழைந்தேன். வேறு வழியாக-' நான் நடந்து கொண்டே போனேன்-’’ 'நான் வேடிக்கை பார்த்துக் கொண்டே போனேன்.-’ "நான் உன்னைக் கண்டேன்.” 'நானும் நீ என்னைக் கண்ட அதே சமயத்தில் உன்னைக் கண்டேன்.” - "ஆனால் உன்னோடு பேசினேனோ பேசத்தான் தைரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/28&oldid=870353" இலிருந்து மீள்விக்கப்பட்டது