பக்கம்:மீனோட்டம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

座 நடமாடிக் கொண்டிருக்கிறதே ஒரு வியாக்யானம்generation gap 93.jøj ol-"&" 曼 தப்பக்கங்களில், எங்கேனும் மீன் உன்னைக் கடித்தால் கவ்வினால்-நான் உன்னைத் தொட்டு விட்டேன். குருடன் சிற்பத்தைத் தடவித் தெரிந்து கோள்வதுபோல், உன்னை அடையாளம் கண்டு கொள்கிறேன். நினைப்பதே என்னை என்னவோ ப்ண்னுகிறது. இப்படித்தான்-அன்று. கூடத்தில் நின்றபடி ஏதோ வேலையாயிருந்தேன். திடீரென, அறையி லிருந்து கிட்டப்பாவின் குரல் பு றப்பட்டது. “எட்டாப் பழமடியோ-ஒஒஓ’ அந்த வெள்ளி மணிக்குரல், உயிரின் பிரிவாற்றா மைத் தவிப்பு ஆதிமூல அலறலாகவே மாறி, பூமியையே பட்டை உரித்துக் கொண்டு, அபட்டு பாணம் நாதபிந்துக்களை உதிர்த்துக் கொண்டு, வான்மண்டலத்தை நோக்கி ஏறுகிறது. . என்னுள் ஏதோ பாம்புக்குத் தூக்கம் கலைந்தது. சீறல் கால் கட்டைவிரல் நுனியிலிருந்து புறப்பட்டு, க்ர்ர்ர்ரென்று உச்சி மண்டைக்கு ஏறிற்று. கை கால் பரபர்க்கின்றன. உடல், இல்லை, பூமி கிடு கிடு நல்லவேளை, சேகர் பக்கத்திலிருந்தான். என் நிலை கண்டு என்னைப் பிடித்துக் கொண்டான். என்னை மெதுவாய் நட த்திச் சென்று, ரேடியோ பக்கத்தில், சாய்வு நாற்காலியில் உட்கார்த்தினான். என் தலை சாய்ந்தது. இமைகள் மூடிக் கொண்டன. “எட்டாப் பழமடியோ தெவிட்டாத தேனடியோ மட்டிலா ஆனந்தமே கிளியே மால் மருகன் தந்த்சுகம்’ இப்படியே, இப்பவே சாவு கிட்டிவிட்டால் இதைவிட சுகம் உண்டோ? அம்மாடி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/6&oldid=870420" இலிருந்து மீள்விக்கப்பட்டது