திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 89 அழகிய சங்குகளை ஒதுக்கி யெறிந்து எழுந்து வீசும் அலையின் (கடலின்) பெருமை எட்டுத் திசையிலும் மேம்பட்டு விளங்கும் திருச்செந்தூரில் வீற்றிருக்கும் குமரேசா! காத்தளிக்கும் சங்கரிக்கும், சங்கரர்க்கும், சங்கரர்க்கு இன்பம் புதுப்பிக்கும் கங்கைக்கும் பிள்ளையாம் இறைவனே! கொல்லைகள் விளங்கும் மலையில் (வள்ளிமலையில்) விளையாடிக் கொண்டிருந்த செந்தினை (காத்த) பசும் பொன் அனைய குறவர் மகளின் (வள்ளியின்) குளிர்ந்த கொங்கைப்புறத்தில் துயில்கொள்ளும் பெருமாளே! (உன் பதத்தின்பந் தருவாயே) 31 குழைத்துக் கலவையான சந்தனம், செங்குங்குமம் (இவைகள் பூசப்பட்டுள்ள) அ ழகிய நல்ல மலை (போலும் கொங்கைகளைக்) குலுக்கும் பசுங்கொடி (போலத் தோன்றி) இங்குத் தகுதியோடு - குழை பூண்டுள்ள காதினிடத்தும், நிறமுள்ள குமிழம்பூப் போன்ற மூக்கினிடத்தும் சென்று பேசுவதுபோல (எட்டிப் பார்க்கும்) செவ்விய கயல்மீன் போன்ற கண்களைக் கொண்டு அழைக்கின்ற சீபண்பு (அல்லது இசைக்குரல்) தழைத்துள்ள விஷமிகள் பொருட்டு (நஞ்சுபோல்பவர்கள் காரணமாக) - 1. குண் - குணம் (நிறம்) 2. பண் - பண்பு. கடைக்குறை.
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/105
Appearance