உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 முருகவேள் திருமுறை 13. திருமுறை 'ಹಣ್ಣೆಣ್ಣೆ ராம லைந்திடு களிறுக்கரு ளேபுரிந்திட நொடியிற்பரிவாக வந்தவன் மருகோனே;

  • அகரப்பொருளாதி யொன்றிடு முதலக்கரமானதின் பொருள்

அரனுக்கினி தாமொ ழிந்திடு குருநாதா. அமரர்க்கிறை யேவணங்கிய பழநித்திருவாவினன்குடி அதனிற்குடி யாயி ருந்தருள் பெருமாளே. (11). 111. பொதுமகளிர்மேல் மயக்கம் அற வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள் வந்தவர் தங்களை வாதை கண்டவர் வங்கண முந்தெரி யாம லன்புகள் பலபேசி. மஞ்சமி ருந்தது ராக விந்தைகள் தந்தக டம்பி களுற லுண்டிடு * மண்டைகள் கண்டித மாய்மொ ழிந்திடு முர்ையாலே, ന് சஞ்சல முந்தரு மோக லண்டிகள் இன்சொல்பு ரிந்துரு காத தொண்டிகள் சங்கம மென்பதை யேபு ரிந்தவ னயராதே. தங்களில் நெஞ்சக மேம கிழ்ந்தவர் கொஞ்சிந டம்பயில் வேசை முண்டைகள் தந்தசு கந்தனை யேயு கந்துடல் மெலிவேனோ, 1. முதலை, இடங்கர். கரா (ம்) - இவை மூன்றும் (முதலையின்) சாதி விசேடம். " கொடுந்தாள் முதலையும் இடங்கரும் கராமும்". குறிஞ்சிப் பாட்டு 257, கரா. ஆண்முதலை (பிங்கலம்). இந்திரத்துய்மன் அகத்தியர் இட்ட சாபத்தால் கஜேந்திரன் என்னும் யானையாயினவன். சாபத்தால் வேற்றுருக்கொண்டிருந்த முதலையின் வாயிற் கஜேந்திரன் சிக்கிக்கொண்டு, திருமாலை எண்ணி ஒலமிட, அவர் உடனே வந்து சக்கரத்தை ஏவி முதலையைக் கொல்வித்து யானையை மீட்ட வரலாறு இங்குக் குறிக்கப்பட்டுள்ளது. 2. அகரப்பொருளாதி ஒன்றிடு முதலக்கரம். அகார உகார மகாராதிகள் அடங்கிய பிரணவம் தொண்டியர்கள் - தாயுமானவர் எந்நாட் 14