உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 347 149 தலைவலி, வசிய மருந்திடுதலால் வரும் நோய், காமாலை, சோகை (ரத்தமின்மை), சுரம், கண்ணோய், வறட் சூலை வலிப்பு வறள் வலிப்பு எனப்படும் வயிற்றுவலி, காசம் (ஈளைநோய்). அதன் காரணமான மூச்சு வேதனை நீர் சம்பந்தமான மிக்க நீர் கோத்தல் நீரிழிவு - என்னும் நோய்கள், கொடிய விஷ சம்பந்தமான நோய்கள், ரபஞ்ச மாயையால் வரும் விகாரமான பிணிகள் (என்னை) அணுகாத படிக்கும் - பூமியில் அந் நோய் போகவேண்டி அதற்கான பேர்களோடு(நோய் வேதனையைக்)கூறி, இது நீங்குதற்கு வழி யாது என்று கேட்க, (அவர்கள்) காது கேளாது ப்ோலப் போகின்றவர்கள் (சிலர்), மிக மூத்த வயதாய் விட்டதே (உங்களுக்கு), என்னதான் கொடுப்பீர்கள், சொல்லுங்கள் (என்பவர் சிலர்) - என்றெல்லாம் பிறர் கூறும்ப்டியான விதியை என் தலையில் எழுதிவிடாத படிக்கும் (நான்) ஊக்கக் குறைவு இன்றி (ஊக்கத்தடன்), விருப்புடன், பெரிய பூந்தோட்டத்தில் உள்ள மணமுள்ள மலர்களை வகை வகையாக எடுத்துத் தொடுத்து மாலை வகைகளில் ஆபரணங்கள் போல அம்ைத்து உனது திருவடியிற் டுதற்கே மனம் நாடுகின்ற சிறந்த தவ ரேஷடர்களுடைய இரண்டு பாதங்களையும் - உள்ளத்தில் தரித்தே, ஆய்ந்த அறிவுடன் பாடி, (உனது) திரு அருள்ால் (உன்ன்ை) வழிபடுதற்கு என்மீது அன்பு கூர்ந்து (உனது தாளை உதவ பாம்பை எடுத்து (உதறி) ஆடும் மயில்மீது வந்தருள வேணும். அலைகடலை அடைத்து மகா கோரமான ராவணனுடைய மணி முடிகளை அறுத்துத் தள்ளி, உயிருக்கு ஒப்பான சீதாபிராட்டியைத் தனது (புய) வலியால் அழைத்துக் கொண்ட மாயவனை (திருமாலை) மாமன் என அழைக்கும் மருகனே!