குன்று - வள்ளிமலை திருப்புகழ் உரை 285 தேன் பொருந்திய (கமலம் ஒக்கும் எனவும்) தாமரை (மொக்குப்) போன்ற கொங்கையை உடைய உண்மை நிலை தவறாத குறத்தி (வள்ளி) அன்பு கொள்ளும்படி தினந்தோறும் அவளைக் கெட்டியாய் அணைக்கும் மார்பனே! (அலை) வீசும் கடல் சூழ்ந்த (பூமியில்) திருத்தணி (என்னும் தலத்தில்) எப்பொழுதும் வீற்றிருக்கும் முருகனே! எட்டு அசலம் (அட்டகிரிகள் வரையி லும்) எட்டிப் பரவவும், நிலம் முழுமையும் (பரவவும்), தங்கள் முடியை (அரச சின்னத்தை அரசாட்சி அதிகாரத்தை)த் தள்ளிச் செலுத்தின அசுரர் இட்ட (தேவர்) சிறையை நீக்கின (விடுவித்த) பெருமாளே. (பச்சை மயிலுற்று வரவேணும்) 313 தாமரை யிதழ் ஒத்த கண்ணாலும், முல்லை யரும்பு ஒத்த பல்லாலும், துயரம் உறும்படி காம - ஆசைக் கடலை (ஆசைப் பெருக்கைத்) தருகின்ற ‘அள்ளலாம் போல இனிதாக அமைந்து, நடு இரவு போல (அடர்ந்த இருள்) உள்ளதான செய்கைகளை உடையவர்களான அந்த நிறைந்த கொங்கைகளை உடைய (தான் பழகியிருந்த அந்த விலை மகளிரும் பொது மகளிரும்) (அல்லது நள்ளிரவு போன்ற உள்ளத்தையும் செய்கைகளையும் உடைய பொது மகளிரும்) அந்தச் செல்வம் நிறைந்த | o 'அள்ளிக் கொளலாய் அடையத் திரண்டொன்றாய்க் கொள்ளிக்கும் விள்ளாத கூரிருளாய். உள்ளம் புதையவே வைத்த பொதுமகளிர் தங்கள் இதயமே போன்ற திரா" என்று பொது மகளிரின் உள்ளத்தை இவ்வாறே விளக்கியுள்ளார் புகயேந்திப் புலவர்
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/758
Appearance