குன்று - செங்கோடு திருப்புகழ் உரை 483 தினந்தோறும் உன்னுடைய திருவடியில் வைத்த ஒரு ஆசையானது நிலைத்து நிற்கும் வழியை அடியேனுக்கு உபதேசிக்க நீ நினைத்தருள வேண்டுகின்றேன்; சர்ப்பமலை (திருச்செங்கோட்டு) நாதனே! முத்தமிழ் விநோதனே (முத்தமிழிற் பொழுது போக்குபவனே) சக்கரம் கதை இவைகளைக் கர்த்திற் கொண்ட திருமாலின் மருகனே! வாது செய்த சமண ஊமைகளை நிறைந்த கழுவில் ஏற வைத்த ஒப்பற்ற காழி அந்தணனே! கற்பு நிலை தவறாமல் வள்ளிமலை அடிவாரத்தில் မ္ဘိ கூட்டமான வேடர்களின் (கொடியன்ன) மகளாம் வள் ன் தலைவன்ே! (தேவர்கள்) வெறுத்த அசுரத் தலைவர்களின் நெருங்கிய குலத்துக்குக் *ГГol}абTГІ யிருந்தவன்ே (அசுரர் குலத்தை அழித்தவனே) கற்பக விருட்சம் உள்ள நாட்டினராம் (தேவர்தம்) பெருமாளே! (நினதாளில் காதல் நிற்கும்வகை ஒத நினைவாயே) 386 அழகிய விசித்திரமான பச்சைப் பட்டாலாய ரவிக்கையை அணிவித்துக் கட்டித் தாமரைப் பூவுக்கு ஒப்பாகும் என்று கற்பனை கூறி இளைஞோர்கள். பறவை வலையிற் சிக்கினது போல வேசையர்களின் வலையிற்) சிக்கி நன்றாக (அவ்வேசையர்களின்) பல்லாற் கொத்தப் பெற்று (பல வைதல் மொழிகளாற் பேசப் பெற்று) பொன் தித்த பொன்னை (தனத்தை அடைவதற்கு வேண்டி அப்பொருளைத் தெளிவான வகையில் பக்குவமாக்ப் பேசிப் பெறுகின்ற கொடிய சக்கரம் போன்ற வட்ட வடிவுள்ள கொங்கைகளை உடைய மாதர்களின் கல்லைப்போன்ற கடினமான நெஞ்சமாகிய சுத்தப் பொய்யான பித்துச் சூழலிற் புகுந்து, $'அதிக இட்டத்தை வைத்து, (தன்னைப்போல் அவ்வேசையர்களிடம் வரும் பிற காமுகர்களுடன்) கைக் குத்துச் சண்டையும் போட்டு (அங்கும் இங்கும்) சுற்றித் திரிந்து அலையாமல்
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/956
Appearance