குன்று - ஊதிமலை) திருப்புகழ் உரை 505 அடியேனும் நினைத்து நாளும் நாள்தோறும் நினைத்து) (முடிவில் உடலினின்றும் உயிரை விடத் துனிந்த சமயத்தில் அடியேனிடம் வந்து - நீ அப்போது அளித்த (திருவடி தீட்சை செய்த) பாதத்தை - அருள்புரிந்து உதவுக. தனதன தனத்த தான என்று முரசு (பறை) ஒலி செய்ய வீணை, தமருகம் (உடுக்கை), வேத் ஒலிக் கூட்டம் இவை யெல்லாம் அலைமோதுவதுபோலப் (ப்ெருக). மின்னல் போல ஒளிவிடும் வேலைச் செலுத்தி அசுரர்கள் இறக்குமாறு போர்க்க்ளத்தே விடுத்த சோதி முருக்னே! என் மனத்தை உருக்கி, யோக அநுபூதியை அளித்த திருவடிகளை உடையவ்னே எழுதுதற்கு அரிய பச்சை மேனியை உடைய உமையின் பாலன்ே! தேவர்கள் துதிக்க ஞானமலையில் வீற்றிருக்கும் குறத்தி வள்ளியின் பங்கினே! ளங்குகின்ற சசி (இந்திராணி) யின் மகள் (தேவசேனை) விரும்புகின்ற பெருமாளே! (முன் அளித்த பாதம் அருள்வாயே) ஊதிமலை N. 393 ஆதி மகமாயி, அம்பை, தேவி, சிவபிரான் மகிழ்ந்த ஆ உடைய மாது (பசு ஏறும் பிராட்டி), பெற்ற குமரேசனே! (முன் பக்கத் தொடர்ச்சி) மனைவியுடன் முதலில் வாழ்ந்தனர் என்று சிலர் கூறுவர். t தடி - மின்னல். # எழுதரிய சாமளமேனிச் சகலகலா மயில் - அபி.அந்-96 S ஆவுடைய மாது' - திருப்பரங்குன்றத்துத் தேவி (பார்ப்பதியின்) பெயர் ஆவுடை நாயகி" அன்பார் திருப்பரங்குன்றாவுடை நாயகிசேர் நன்பாற் பரங்கிரிநன் னாயகா: - சிவசேத்திர சிவநாமக் கலிவெண்பா.
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/978
Appearance