எட்டிகுடி) திருப்புகழ் உரை 459 முகமானது உண்மையாகவே சந்திரன் தானோ; வெட்குதலின்றி எழுந்துள்ள குத்துமுலைகளுக்கு ஒப்பானவை இளநீரோ, மேருமலையோ (வைப்பதிடைக் கிணை) இடைக்கு இணை வைப்பது இடைக்கு ஒப்பாகக் கூறப்படுவது நூலோ, அதனிலும் மேலான (நுண்ணியதான) ஒன்றோ! (அல்லது மேலோ - ஆகாசமே) என்றெல்லாம் மாதர்களுடைய மனத்தைக் கவரத்தக்க அவயவங்களுள் காம மயக்கம் மிக்கவனாய், கூச்சமில்லாமல் (புணர்) சேர்கின்ற (வாது ஏகாதே) போட்டிச் சண்டையில் நுழையாமல். சீ.சீ எனப் பிறர் சொல்லும்படி திரிகின்ற நாயேன் ஒய்வின்றி அலையாமல். உனது (பொறி) இலச்சினையை - முத்திரையை (வேல் மயில் அடையாளத்தை என்மேற் பொறித்து வைத்துக் கண்பார்த்தருளுக, (தற்சமையத்த) கெளமார சமயத்தவனே (அல்லது சிவசமயத்தவனே!) (கலா வேல்-நாதா) ஒளிவேல் ஏந்தும் நாதனே! தத்து மயற்பரி) தாவிச் செல்லும் மயில் வாகனத்தின் மேலே நீதான் வந்தருளவேனும். (முக்கண்ணர்) சிவபிரான் மெச்சின பாலனே! சீலனே (துளயவனே)! மன்மதனது மைத்துன வேளே! தோள்கள் நிரம்ப மொய்த்துள்ள நறுமணமுள்ள துழாய் (துளசி) மாலை அணிந்தவனாம் திருமாலின் மருகனே! முத்தமிழ்ப் புலமை வாய்ந்த விநோதனே! இசை ஞானியே! பிறர் எவரும் (உனக்கு) நிகராகாத (உருவத்தனே) உருவ அழகனே! ஒளிவளர் விளக்கே! முத்தியைத் தந்து அடியார்மேல் மிக்க ஆசை கொள்ளும் முருகனே! கரும்பு வரிசையாயுள்ள (விராலியூர் அல்லது) (விரால்) வரால்மீன்கள் ஊர்வதும், சேல்மீன்கள் ஊர்வதுமான (செய்) வயல்கள் உள்ள பழநிப்பதி ஊரனே! திருவாரூர், சிறப்புற்ற திரு இடைக்கழி, (புள்ளிருக்கு) வேளுர், தார்-பூ அரும்புகள் ஊர்-அடர்ந்து நிறைந்துள்ள வயலூர் என்னும் தலங்களில் வீற்றிருப்பவனே!
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1018
Appearance