Дымылыя 'திரு. ப் ι"Ιλ, .................BINIT 171 சிவந்த சூரியர்களைவிட அழகான ஒளிவீசும் கருணையே அலங்கார உருவதான தேகத்தை உடையவனே! குருபரனே! திருவண்ணாமலை நகரில் வீற்றிருக்கும் சரவணனே! குராமலை அணிந்த புயங்களை உடைய வேளே! (காட்டிற் சஞ்சரிக்கும்) வேடர் குலத்துப் பச்சைநிற மங்கை (வள்ளியும்) தேவர் குமாரி (தேவசேனையும்) எப்போதும் பக்கத்தில் அழகு விளங்க நிலைபெற்றிருக்க அவர்களுக்கு வரம் தந்தருளிய பெருமாளே! (பொருளினை அருளுவ தொருநாளே) 512. ஆடையும், கஸ்தூரி ஆதிய நறுமணம் கமழும் கூந்தலும் நெகிழ்ந்து குலைய, இரண்டு கொங்கை மலைகள் அசைய, இட்ை துவண்டுநிற்க, மனிதரும், தேவர்களும், முநிவர்களும் கூடவே ஓடிவந்து தொடர, (வனம்) அழகு மணியாலாய மகரமீன்போல விளங்கும் குழைகளைத் தாக்குவனவாய், விஷம் பொலி. வனவாய், ரதியின் கண வன் காமனுடைய சாஸ்திரத்தை எடுத்துக் கூறுவனவாய் விளங்குகின்ற கயல்மீன் போன்ற கண்கள் புரள - மத்தியிலே கிறுபட்ட நிலவை ஒத்த வில்லைப்போன்ற (வளைவுள்ள) நெற்றி (வியர்வுத் துளிகளைத் துளிக்க, தாமரைபோன்ற அடிகள் இரண்டிலும் சிலம்பு ஒலிசெய, தெருக்கள் தோறும் உலாவி, இனிய புணர்ச்சி யின்பத்தை விலை கூறுகின்ற (வரைவு இல் அரிவையர்) - பொதுமகளிர் தருகின்ற சுகக் கடலிலே அலைகின்ற என்னுடைய உயிரானது நாள்தோறும் நன்னெறியிற் செலுத்தும் மெளன. சிவ சுகக் கடலில் திளைத்து முழுகும்படியான (பாக்கியங்கொண்ட) நாள் ஒன்று வருமா! மேகமும் நிலவும் (ரவி) சூரியனுடைய ஏழு குதிரைகளும் தமது நீண்ட குலைகளின் கழுத்துப் பாகத்தில் இடறுண்ணவும் (தடைபடவும்), பழையதாயுள்ள் ஆகாய உச்சி கிழிபடவும் (அவ்வளவு உயரமாய்) வளர்ந்துள்ள கமுக மரங்களின் கூட்டத்தின்மேல் (பாயும்) வாளை மீன்களும்.
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/178
Appearance