திருவாமாத்துர்) திருப் புகழ் உரை 197 விண்ணுலகுக்கு (அல்லது விண்ணவர்க்கு)- உறவு பூண்டவனும், உடலெலாம் கண் கொண்டவனுமான இந்திரன், (வேதா) பிரமன், (விண்டு) திருமால் என்னும் (வித்தகன்) பேரறிவாளன் - இவர்கள் விழுந்து வணங்கும் திருவடியை உடையவர், ரிஷப வாகனத்தில் ஏறுபவர் விருப் பத்துக்கு இடமான (தனத்து) கொங்கையை உடைய உமையாள் விரும்பி அணையும் சந்தனம் பூசின புயங்களை உடைய (மாதிசுரர்) அர்த்த நாரீசுரர் அல்லது ஆமாத்துார் ஈசர், கொடிய் யானையின் உரியையே நிரம்பின போர்வையாகக் கொண்டவர் ஆகிய சிவபிரானது - பெருஞ் செல்வமே! குளிர்ந்த பக்கங்களில் உள்ள சோலைகளாற் சூழப்பட்ட திரு ஆமாத்துாரில் பிரியம் வைத்துத் திருவுருளால் (தாராதலம்) தராதலமும் (உலகும்) கிளைத்திட - செழிப்புற்று ஒங்க, வானிலும், பெரிய திசைகளிலும் பரந்து நிறைந்து, (தண்டு) (யாவரையும்) வருத்தின அரக்கர்கள் கோகோ என்று அலறி (விண்டிட இரிந்து ஒடத் (தட மா மிசை) பெரிய மயில் மீதேறிக், கோபமும் பராக்ரமும் கொண்ட வேலாயுதத்தைச் செலுத்தின பெருமாளே! (தாள் பேணிட அருள் தாராய்) கரிய மேகம் போன்று, (மட்டு) இபTஅ)ெஇT கொண்டுள்ளதாகிய கூந்தலை உடையவர்கள் - தேனில் வெல்லத்துடன் பழம் அமுதம் இவைகள் ஊறித் தெளிந்தது போன்ற பேச்சுக்களை உடைய மாதர்கள் - (கலவிகள்) புணர்ச்சியையும் தருதற்கு நேராக ஏற்புடையவர்கள், (மதனிகள்) செருக்கு உடையவர்கள் காமமும் குரோதமும்) கோபமும் கொண்டவர்கள், (கனம்) (வட்டமான) கொங்கைப் பாரத்தை உடையவர்கள், தொழில் முயற்சியுடன் சண்டை செய்யும் கயல் மீனையும், வாளை மீனையும் கடக்கவல்ல கண்கள்ை உடையவர்கள், கொள்ளைக் காரிகள், (தங்களுக்குக் கிடைத்த) பொருள் எவ்வளவோ அவ்வளவுக்கே தங்கள் ஆசையைச் செலுத்துபவர்கள் பூமியில்
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/756
Appearance