வேப்பூர்) திருப்புகழ் உரை 257 மலைக்குகை யிடம்போல உள்ள கருவிலே (இழி) இறங்கி விழுகின்ற மாக்களுக்கு (மனிதர்களுக்கு) ஏற்படும் (கோட்டாலை) துன்பங்கள் இல்லாமல், (அவிரோதம்) விரோதமின்மை என்னும் உள்ளப்பண்பு வர, (இருவினை) நல்வினை தீவினை இரண்டும் ஒழிய, உணர்வொடு துரங்குவார்க்கே - ஞான உணர்வொடு இருப்பவர்க்கே விளங்கும்படியான (அநுபூதி) அனுபவஞான (அல்லது அருட்ப்ரசாத) வடிவத்தை உனது அழகிய லக்ஷமீகரம் பொருந்திய திருவாக்கால் உபதேசித் தருளவேண்டும்; திரண்டு பருத்த (கிரவுஞ்ச) மலை பிளவுபடவும், குருகுல வேந்தனாகிய அருச்சுனனுடைய தேர்ப்பாகனாய் விளங்கிய கண்ணன் - திருமாலின் - மைந்தனாம் பிரமன் தான் கற்ற வேதமும் தானுமாய் - கலக்கம் உற, அசுரர்களின் மனைவிமார்கள் ஒன்று கூடி தீயில் பாய்ந்து இறக்கவும், தேவேந்திரனுடைய (புரி) ஊர் - பொன்னுலகம் வாழவும் . விரிந்த கடலில் தி எழவும் - தான் முதன்மையாம் தன்மை விளங்க (வாங்கு) பிரயோகித்த (செலுத்தின) வேலாயுதத்தை உடையவனே! கந்தனே! உலகேழின் வறுமை நீங்கும் அளவுக்கு செழிப்பான விளைச்சலைத் தருகின்ற வயல்கள் சூழ்ந்த வேப்பூரில் வீற்றிருக்கும் பெருமாளே! (வாக்கால் மொழிந்தருள வேணும்)
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/816
Appearance