உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/637

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

630 முருகவேள் திருமுறை 19திருமுறை (2) எனை ஆண்ட இடம் தானோ அருணகிரியாரை ஆண்ட இடம் திருவண்ணாமலை. அருண்ையிற் சித்தித் தெனக்குத் தெளிவருள் பெருமாளே. திருப்புகழ் 550 அயனும் அரியும் ஆணவம் ஒழியப்பெற்ற இடம் திருவண்ணாமலை. ன் ஆணவமற்ற நிலைதான் பொருளோ! என னவினதாம். யான் தான் கெட்டால் பொருள்' இன்னதென்று புலப்படும் என்றார் கந்தரலங்காரம் 95ஆம் ::(தொகுதி 6, பக்கம் 92, 93 குறிப்புரையைக்காண்க) 4. மனை, மக்கள் எனும் பந்தம் அற வளைபட்ட கைம் மாதொடு மக்க ளெனுந் தளையட் டழியத் தகுமோ தகுமோ திளைபட் டெழுஆர் உாமுங் கிரியுந் தொளைபட் டுருவத் தொடுவே லவனே. (அந்) கிளைபட்டெழு.......வேலவனே! வளைபட்ட. தகுமோ. (பொ.உ) (கிளைபட்டு எழு) சுற்றத்தினர் சூழப் (போருக்கு) எழுந்த (அல்லது கிளைக்ளோடு கூடிய மாமரமாய் எழுந்த), (சூர்) சூரபத்மனது (உரமும்) மார்பும், (கிரியும்) அவ்னுக்கு அரண்ாயிருந்த எழுகிரியும், (தொளைபட்டு) தொளைபடும்படி (உருவ) ஊடுருவிச் செல்லத் (தொடு) #j வேலாயுதனே! (வளைபட்ட) வளையலை அணிந்த (கை) கரங்களைக் கொண்ட (மாதொடு) மனைவியோடு, (மக்கள் எனும்) குழந்தைகள் என்னப்பட்ட (தளை) பந்தத்திற் (பட்டழிய) கப்பட்டு (நான்) அழிந்துபோதல் (தகுமோ தகுமோ) நீதியா! நீதியா (நீதி அன்று என்றபடி) (சு-உ) வேலவனே! மனை மக்கள் என்னும் பாசத்தில் நான் மாட்டிக்கொண்டு கெடாதவண்ணம் காத்தருளுக. (கு.உ) (1) வளைபட்ட கை - வளையல் கையைச் சூழ்ந்து நிற்பதுபோல, மாது மக்களாம் பாசம் நம்மைச் சூழ்ந்து நிற்கின்றது என்பது குறிப்பு: பழவினை புகுந்த பாடகம் போல' (கல்லா ம் 8) என்புமிப்போல,