உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் 103 போலவே அரசியல் தளம் செழுமை யாக அமையாவிட்டால் சமூகப் பொருளாதாரம் மக்கள் நுகர்வுகளாக மாறாது. எனவே தான் பொருளாதாரதளத்தில் சோசலிசமும், அரசியல் தளத்தில் ஜனநாயகமும் இசைவாக அமைய வேண்டும் விரும்புகிறோம். ஆனால் மனித குலத்தின் லட்சியம் என்ன? சோசலிச நுகர்வு, ஜனநாயக, நல்லிணக்கம், இவை எதற்காக? மனிதனும், சமூகமும், மொத்தமாக மனிதகுலமும் மேலும் மேலும் சந்தோசத் தோடு புதிது புதிதாகப் பரிணமிப்பதற்காக, ஆக மொத்தம் பார்த்தால் முக்கியமானது - லட்சியமானது பண்பாட்டுத் தளமே. பண்பாட்டுத்தளத்தில் மனிதநேயம் பொங்கிப் பெருகுவதற்காகவே சோசலிசம் வேண்டும் என்கிறோம், ஜனநாயகமும் வேண்டும் என்கிறோம் . இந்த அடிப்படை களை ஏற்றுக் கொள்ளும் போது நம் பார்வை விசால மடைகிறது. சமூகத்தில் ஒவ்வொரு மனிதனும் மேலும் மேலும் நிறைவாக வாழ வேண்டும் எனப்போராடுகின்ற அனைத்து அணிகளும் ஒன்றுக்கொன்று சமத்துவ உணர் வோடும், மரியாதை உணர்வோடும், சகோதரத்துவ உணர் வோடும் நடந்து கொள்ளுவதும், புரிந்து கொள்ளுவதும் ஒத்துழைப்பதும், இன்றியமையாதது. இதர பாரம்பரியங்களைவிட பண்பாட்டுப்பாரம் பரியங்கள் தூக்கலானவை. இவற்றைப்புரிந்து கொள்ள வும், இவற்றில் வாழும் அம்சங்களைப் புரிந்து கொள்ளவும், காலத் தேவைக்கு ஏற்ப அவற்றை வளர்க்கவும் வேண்டும். பிற தளங்களில் போல பண்பாட்டுத் தளத்திலும் உடனடி நோக்கங்களும் தொலை தூர லட்சியங்களுமான ஈரம்சக் கூறுகளாகவே எல்லாம் உள்ளன. உடனடித் தேவைகளில் தொலை தூர லட்சியங்களை வெளிப்படுத்தும் பேராற் றலைக் கலைஞன் வளர்த்துக் கொள்ள அவன் பேசுபவை அரசியல் எல்லைகளையும், சமூக எல்லைகளையும், தேச எல்லைகளையும், ஏன், கால எல்லைகளையும் கூடத்தாண்டி ஒளி கொடுக்கும். இத்தகு ஆற்றல் உள்ள பண்பாட்டுக் கூறுகளை உருவாக்கும் கலைஞர்களிடையே அரசியல்