உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்றும் நனைந்தவர்க்கு ஈரமுண்டோ?

99

போய்விட்டார். பொழுது விடிந்தது. டிப்டி கலெக்டர் விட்டில் நடந்த பயங்கரமான கொள்ளையைப்பற்றி செய்தி மிகவும் சீக்கிரமாக ஊர் முற்றிலும் பரவியது. தமது ஸ்டேஷனிலிருந்த இன்ஸ்பெக்டர் புளுகுமலைப் பிள்ளை கொள்ளை நடந்ததென்பதைக் கேட்டு, வியப்பும் திகைப்பும் விசனமு மடைந்து, உடனே புறப்பட்டு டிப்டி கலெக்டருடைய வீட்டிற்கு ஓடோடியும் வந்தார்; வீட்டின் உட்புறத்தையெல்லாம் ஆராய்ந்து பார்த்தார். வாசலிலிருந்த காலடிச் சுவடுகளின் மீது காகிதங்களை வைத்து அவற்றின் வடிவத்தை அப்படியே சித்திரமாக எழுதிக்கொண்டார். எதிர்த்த வீட்டு ஏகப்பன், நடுவிட்டு நாகப்பன், அடுத்தவீட்டு அங்கப்பன் முதலியோரிடம் வாக்கு மூலங்களை வாங்கினார். வைத்தியசாலையிலிருந்த கிட்டன், தங்கம்மாள் முதலியோரிடம் சென்று கிட்டனிடம் வாக்குமூலம் வாங்கிக் கொண்டார். அவனது உடம்பிலும் தங்கம்மாளது உடம்பிலுமிருந்த காயங்களைப் பற்றிய விவரங்களை யெல்லாம் டிப்டி கலெக்டர் வீட்டில் நடந்த கொடிய கொள்ளையைப் பற்றி வருந்திப் பேசி வாய்ச் சொற்களாலும், கண்ணீரின் ரூபமாகவும் மிகுந்த அனுதாபத்தை ஒட விட்டார். அங்கு மிங்கும் ஓடினார். மாஜிஸ்டிரேட்டிடம் சென்று அவரைக் கட்டிக்கொண்டழுதார்; டிப்டி கலெக்டர் ஊரில் இல்லை யென்னும் சங்கதியை அறிந்த உள்ளாளின் உளவினால் அந்தக் கொள்ளை நடந்திருப்பதாகக் கூறினார். டிப்டி கலெக்டர் ரஜா வாங்கிக் கொண்டு போன விஷயம், அவரது சேவகர்களுக்கு மாத்திரமே தெரிந்ததென்றும், அவர்கள் மீது தாம் சந்தேகங்கொள்வதாகவும் கூறி சேவகர்கள் ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று விசாரணை செய்தார். சேவக ரெங்கராஜுவின் வீட்டிற் கெதிரில் அன்று பகலில் சில பள்ளர்கள் மீன் விற்றுக்கொண்டிருந்ததாக அவரது விசாரணையில் இரகசியம் வெளியாயிற்று; தஞ்சாவூர் கீழ்க்கோட்டை வாசலிலிருந்து மாரியம்மன் கோவிலுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/100&oldid=1251977" இலிருந்து மீள்விக்கப்பட்டது