உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்றும் நனைந்தவர்க்கு ஈரமுண்டோ?

103

வாங்கியதாக யூகிக்க இடமிருக்கிறதென்று சந்தேகமாக எழுதி யிருந்தாரேயன்றி அதை உறுதியாக எழுதவில்லை; ஆகையால், அது மாத்திரம் ருஜுவாகவில்லை யென்று நழுவ விட்டுவிடுவது அவருக்கு எளிதாகத் தோன்றியது. இந்நினைவுகளுக்கிணங்க, சாம்பசிவத்தின் மீது முடிவான குற்றப்பத்திரிகையைத் துரை உடனே தயாரித்தார். அதில் அடியிற் காணப்பட்ட குற்றங்களைக் குறித்தார் :-

1) நான்கு நாட்களுக்கு முன் அவர் ரஜா இல்லாமல் சென்னைக்குப் போனது. (இதற்குச் சாட்சியம்; பெண்ணை அழைத்து வந்ததாக சென்னையிலிருந்து வந்த தந்தி, பெருந்தேவியம்மாள் சாமாவையர் ஆகிய இருவரது வாக்கு முலம்)

2) அன்றைய தினம் அம்பாள் சமுத்திரம் முதலிய ஊர்களில் இருந்ததாக பொய்யான செலவுப்பட்டி தயாரித்து சர்க்கார் பணத்தைப் பெற்றுக்கொண்டது. (இதற்குச்சாட்சியம்; செலவுப்பட்டியும் மேற்கண்ட தஸ்தாவேஜுகளும்)

3) முதல்நாள்தாம் ரஜாக் கொடுக்க மறுத்திருந்தும், அந்த உத்தரவை மீறி சென்னைக்குப் போனது. (இதற்குச்சாட்சியம்; சென்னையில் போலீஸ் கமிஷனர் முன் கையெழுத்திட்ட காகிதம்)

இம் மூன்று குற்றங்களுக்காகவும் சாம்பசிவத்தை ஏன் வேலையிலிருந்து அறவே நீக்கிவிடக் கூடாதென்பதற்குத் தக்க முகாந்திரங்களை இரண்டு நாட்களுக்குள் அவர் எழுதியனுப்ப வேண்டிய தென்று கலெக்டர் குற்றப்பத்திரிகை தயாரித்து வைத்துக்கொண்டு சென்னையிலிருந்து சாம்பசிவத்தின் வருகையை எதிர்பார்த்திருந்தார்.

இங்கு நிலைமை இப்படியிருக்க, சென்னையிலிருந்து புறப்பட்ட சாம்பசிவமும் கனகம்மாளும் பித்தமும் பேயும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/104&oldid=1251981" இலிருந்து மீள்விக்கப்பட்டது