உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

மேனகா


அவர்கள் நால்வரும் வெளியிலேயே நின்றனர். டாக்டரது சொற்களிலிருந்து தங்கம்மாளின் தேக நிலைமையில் முன்னிலும் அதிகமான கெடுதல் ஏற்படவில்லை யென்று ஊகித்துக்கொண்டவரா யிருந்தனர்; கால்நாழிகை வரையில் எவரும் வாய்திறக்க வில்லை. பிறகு கனகம்மாள், “அடே ரெங்கராஜு நீ எங்களுடனேயே இருக்கிறாயே கச்சேரிக்கு வரும்படி உனக்கு உத்தரவு வரவில்லையா?” என்றாள். ரெங்கராஜூ, தான் வேலையிலிருந்து விலகிக்கொண்டதை அப்போது தெரிவித்தால் அவர்கள் தன்மீது கோபமுற்று, தன்னை சென்னைக்கு அழைத்துப் போகாமல் விட்டு விடுவார்களோ வென்று அஞ்சி உடனே ஒரு பொய்மொழி கூறினான்; “நான் நேத்து காலையிலேயே கச்சேரிக்குப் போயி ஒரு வாரத்துக்கு ரஜா வாங்கிப்புட்டேன்; பட்டணத்துக்கு நானும் வாரேனுங்க என் மனது தாளல்லீங்க” என்று உருக்கமாகக் கூறினான்; அவனது உண்மையான அன்பையும், ஆபத்தில் உதவும் நற்குணத்தையும் காண, சாம்பசிவம் கனகம்மாள் ஆகிய இருவரது மனமும் பொங்கிப் பூரித்தது. தமது கண்களில் துளிர்த்த நீரைத் துடைத்துக் கொண்டனர்.

உடனே கனகம்மாள் சாம்பசிவத்தினிடமிருந்து ஐந்து ரூபா நோட்டொன்றை வாங்கி ரெங்கராஜூவிடம் நீட்டி, “நீ எங்களோடு வந்துவிட்டால், உன்னுடைய வீட்டில் பெண்டாட்டி பிள்ளைகளுக்கு ஒரு வாரத்துக்கு வேண்டிய சாமான்களுக்கு என்ன செய்வார்கள்; இந்தப் பணத்தையாவது கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வா!” என்றாள்.

ரெங்கராஜு நோட்டை வாங்காமல், “சாமங்க நிறைய இருக்குதுங்க; இப்பதான் சம்பளம் வந்துச்சு; வாங்கிப் போட்டேன். அதைப்பத்தி கவலையில்லீங்க; சாமி புண்ணியத்துலே தங்கம்மாளும் பொழைச்சு ஒங்க கலியும் நீங்கினா அதுவே போதுங்க” என்றான். தங்களுக்கு நேர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/119&oldid=1251999" இலிருந்து மீள்விக்கப்பட்டது