உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

மேனகா

மேனகாவின் கண்கள் மாத்திரம் இரண்டொரு விநாடி திறந்து மூடிக்கொண்டனவன்றி அவள் உலகத்தையும் தன்னையும் மறந்து கிடந்தாள்.

அவள் நன்றாகக் குணமடையும் முன்னர்தான் அவளிடம் அதிகமாக உரையாடி, அவள் மனதிற்கு உழைப்பைக் கொடுத்து விட்டதைக் குறித்து தன்னைத் தானே தூற்றிக்கொண்டவளாய் நூர்ஜஹான் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். அதிக மூர்க்கமாகப் பொங்கியெழுந்து வதைத்த எண்ணிறந்த நினைவுகளால், சூறாவளிக் காற்றில் அகப்பட்ட சருகைப் போல அவளது மனம் தடுமாறியது. மேன்மையும் இரக்கமுமே வடிவாய்த் தோன்றிய அந்தப் பொற்கொடி என்ன செய்வாள்! எதைக் குறித்து வருந்துவாள் மேனகாவிற்கு வந்த விபத்தைக் குறித்து வருந்துவாளா? அன்றி, தனது கணவனது இழிகுணத்தையும் வஞ்சகச் செயலையும் நினைத்து வருந்துவாளா? தான் நல்ல கணவனை யடைந்து அது காறும் பேரின்ப சுகமடைந்ததாக நினைத்திருந்த தனது எண்ணமெல்லாம் மண்ணாக மறைந்ததையும், தனது எதிர்கால வாழ்க்கையே இருள் சூழ்ந்த பாழ் நரகாய்ப் போனதையும் நினைத்து வருந்துவாளா? மேனகா எவ்விதமான களங்கமுமற்றிருந்தாள் என்பதை ருஜுப்படுத்தி அவளது கணவனிடம் எப்படிச் சேர்ப்பது என்பதைக் குறித்து வருந்துவாளா? தனது உயர்ந்த கல்வியாலும், அறிவாலும், புத்தியாலும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் தான் தனது நாதனை இன்புறுத்தி, அதனால் தானும் இன்புற நினைத்திருந்த தனக்கு, நற்குணம், விவேகம், முதலியவற்றின் அருமையை ஒரு சிறிதும் உணராதவனும் கேவலம் அழகை மாத்திரம் கருதி அயல் வீட்டுப் பெண்களின் மீது மோகங்கொண்டு தீமைகள் இயற்றும் காமாதுரன் புருஷனாக வந்து வாய்த்ததை நினைத்து வருந்துவாளா? தான் இனி தனது ஆயுட் காலத்தை எவ்வாறு கடத்துவதென்பதை யெண்ணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/12&oldid=1251476" இலிருந்து மீள்விக்கப்பட்டது