உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்றும் நனைந்தவர்க்கு ஈரமுண்டோ?

125

நான்தான்துணிவேனா? இந்த மனிதன் ஜெகஜாலப்புரட்டனா யிருக்கிறானே! கிட்ட நெருங்குவோர் மேலெல்லாம் பழி போடுகிறானே! அப்பப்பா! இது பெருத்த மோசடியா யிருக்கிறதே! அவர் என்னிடம் மனுவும் கொடுக்கவில்லை; ரஜா கொடுக்கப்பட்டதென்று நான் செய்தியும் அனுப்ப வில்லை; உத்தரவானால், அப்படியே நான் காகிதத்தில் வாக்குமூலம் எழுதித் தருகிறேன். அதை மற்ற காகிதத்தோடு ஆதாரமாக சேர்த்துக்கொள்ளுங்கள்” என்றார். “பொய்யுடை யொருவன் சொல் வன்மையினால் மெய் போலும்மே” என்றபடி, ராயர் அழுத்தந் திருத்தமாகச் சொன்னதைக் கேட்ட துரை அதை உண்மை யென்று நம்பி விட்டார். அவ்வாறே ஒரு காகிதத்தில் அவரிடம் வாக்குமூலம் எழுதி வாங்கிக்கொண்டு, குற்றப்பத்திரிகையின் நகலொன்றையும், எல்லா வாக்கு மூலங்களையும், சாம்பசிவத்தின் சமாதானத்தையும் துரை சேர்த்துத் தைத்து, அதனுடன் ஒரு அறிக்கையும் எழுதி, யாவற்றையும் சென்னை துரைத்தனத் தாருக்கு அனுப்பி விட்டார். அந்த அறிக்கையில் சாம்பசிவம் தாம் அறிந்த வரையில் அயோக்கியதை, அகம்பாவம், பொய், சூது முதலிய வற்றிற்கு இருப்பிடமானவ ரென்றும் கீழ் அதிகாரிகளையும், சிப்பந்திகளையும் நடத்தும் திறமையற்ற முட்டாளென்றும், முன்கோபத்தால் தாசில்தார் முதல் தலையாரி வரையிலுள்ள யாவரையும் அடித்தும் திட்டியும் கொடுமை செய்வாரென்றும், மேம்பட்ட பதவியான டிப்டி கலெக்டர் உத்தியோகத்தை வகிக்கும் கண்ணிய மற்ற அற்ப மனித ரென்றும், அக்கிரமங்களைச் செய்ய அஞ்சாதவரென்றும் துரை விரிவாக எழுதினார். அவர் லஞ்சம் வாங்குவதில் மகா சமர்த்தரென்றும், அதைப்பற்றி ஊர் முற்றிலும் பெருத்த புரளியாக இருப்பதாயும், ஆனால், அதை ருஜுப்படுத்தப் போதுமான அளவில் சாட்சிகள் இன்னும் முன் வரவில்லை யென்றும் எழுதினார். அவர் வீட்டில் நடந்த பயங்கரமான கொள்ளையும், அவரது மனைவிக்கு நேர்ந்த பெருந் துன்பத்தையும் பற்றி, விரிவாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/126&oldid=1252008" இலிருந்து மீள்விக்கப்பட்டது