பக்கம்:மேனகா 2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

மேனகா

ஓடினான். அதற்குள் நூற்றுக்கணக்கான பிரயாணிகள், அதென்ன காட்சியோ வென்று வேடிக்கை பார்க்க வந்து தொட்டிலைச் சுற்றிக் கூடிவிட்டனர். அதில் மயிலோ மடவன்னமோவெனப் படுத்திருந்த சுவர்ண விக்கிரகத்தைக் கண்டவுடன், ஜனங்களின் வியப்பும் திகைப்பும் நிரம்பவும் பெருகின் அதிலிருந்த மாதரசி மூச்சுப் பேச்சின்றி கண் திறவாமல் படுத்திருந்ததையும், அவளது சுந்தர மேனியில் ஏராளமான இரணக்கட்டுக ளிருப்பதையும் காண அவர்களது மனமிளகியது; ஒவ்வொருவரும் கனகம்மாளிடம் கேட்டு நிகழ்ந்ததை அறிந்தனர்; உடனே கண்ணிர் விடுவோரும், “இந்த அம்மாளுக்கு என்ன காலகதி வந்ததப்பா” என்போரும், “ஐயோ பாவம்! அழகுவழிகிறதே! இந்த மஹாலக்ஷுமியை அடிக்க அந்தக் கொலைகாரப் பயல்களுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ?” என்போரும் , அதைக் காணப் பொறாமல் லபோ லபோ என்று வாயிலடித்துக்கொண்டு, “அட பாவி! இந்தப் பச்சைக்கிளியை இப்படி கொல்வானா! அவன் வீடு குட்டிச்சுவராய்ப் போக” என்போரும் “அந்த டாக்டரிடம் கொண்டுபோங்கள்” என்போரும், “இந்த டாக்டரிடம் கொண்டுபோங்கள்” என்போரும், “இந்த நிலைமையில் இவ்வளவு தூரம் கொண்டுவந்திருக்கக் கூடாது” என்போரும், தாம் ஒருகால் கச்சேரிக்குச் சாட்சியாகப் போக நேரிடுமோவென்று, அஞ்சி நெடுந்துரத்திற்கு அப்பா லிருந்தபடியே முகத்தை வேறு பக்கமாகத் திரும்பிக்கொண்டு குடுகுடென்று ஒடுவோருமா யிருந்தனர். அந்தச் சமயத்தில் தமது அதிகாரத்தைக் காட்டினால் ஏதாகினும் பணம் பெயருமென்று நினைத்து ரயில்வே சிப்பந்திகளிற் பழைய பெருச்சாளிகளான சிலரும் போலீஸாரும், “இங்கே என்ன இவ்வளவு கூட்டம்? போங்கள், போங்கள். தொட்டிலை ஏன் இங்கே வைத்திருக்கி றீர்கள்? சீக்கிரம் எடுத்துக்கொண்டு போங்கள். இங்கே வைக்க வேண்டாம்” என்று அதட்டி, பிணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/129&oldid=1252011" இலிருந்து மீள்விக்கப்பட்டது