பக்கம்:மேனகா 2.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

மேனகா

பகலாய்க் காத்திருந்து மணிக்கு மணி மருந்துகளைச் செலுத்தவும் ஆயத்தமாக ஒரு வெள்ளைக்கார பணிமகள் அவனுக்காகப் பிரத்தியேகமாய் நியமிக்கப்பட்டாள். அவ்வாறு இரண்டு மூன்று நாட்களாயின. கடுமையான ஜுரம் தலைகாட்டியது. இரணங்கள் யாவும் சீழ் கோர்த்துக்கொள்ளும் நிலைமை யடைந்தது, விண் விண்ணென்று தெறித்து பொறுக்கலாற்றா நோவை யுண்டாக்கின. மூளை சிதறிப்போயிருந்தது. அவன் பிதற்ற வாரம்பித்து , “அடி சண்டாளி! துரோகி! தப்பியோடிப் போய்விட்டாயோ! என்மேல் மோட்டார் வண்டியை வேண்டு மென்றே ஏற்றி என்னைக் கொல்ல நினைத்தாயோ! ஆகா! மாயாண்டிப் பிள்ளையின் மயக்கமா! ஒரே அடியில் மண்டையைப் பிளந்திருப்பேனே! திண்டென்ன! தலையணை களென்ன! அலங்காரமென்ன! என்னைக் கண்டு கண்ணை மூடிக்கொள்ளு கிறாயோ?” என்று கூறுகிறான். பற்களை நற நற வென்று கடித்து ஓசை செய்கிறான். முக்கல், முனகல் முதலிய விகாரக் குறிகள் உண்டாக்கின. உடம்பு சிறிதளவு புரளுகிறது. வெள்ளைக்காரப் பணிப்பெண்ணோ இமை கொட்டாமல் அருகில் உட்கார்ந்திருந்து விலையுயர்ந்த அரிய மருந்துகளை விடாமுயற்சியோடு செலுத்தி, நிமிஷத்திற்கு நிமிஷம் காணப்பட்ட முகமாறுபாடுகளை மிகவும் எச்சரிக்கையாகக் கவனித்தவண்ணம் பெரிதும் கவலை கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். காலையிலும் மாலையிலும் பெரிய டாக்டரும், டாக்டர் துரைஸானியும் வந்து அவனது நிலைமையை நன்றாக ஆராய்ச்சிசெய்து புதிது புதிதான மருந்துகளைத் தயாரிக்கச்செய்து பலவாறு பிரயோகிக்கச் செய்தனர்; சாமாவையர், பெருந்தேவியம்மாள் முதலியோர் எவரும் நாலைந்து நாட்கள் வரையில் அங்கு வரக்கூடாதென்று கட்டளையிட்டனர். அந்தப் பயங்கரமான நிலைமை ஏழெட்டு நாட்கள் வரையில் நீடித்திருந்தது. ஓயாமல் செலுத்தப்படும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/147&oldid=1252157" இலிருந்து மீள்விக்கப்பட்டது