பக்கம்:மேனகா 2.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேம்போ கரும்போ

149

தீங்குரலே, மந்திர உச்சாடனம் போல, அவனது பிணியைத் துரத்தியதாயினும், அவனது மனம் மாத்திரம் மிகுந்த ஆத்திரமடைந்தது. “எங்கே போனாலும் பெண் பீடைகள் மனிதரை விடமாட்டேனென்கின்றனவே! இவர்களுக்குப் பயந்து மனிதர் எமலோகத்தில் ஒடி ஒளிந்து கொண்டாலும் இவர்கள் விடமாட்டார்கள் போலிருக்கிறதே! சே! சே! என்ன உலகம்! வைத்திய சாலையில் கூடவா இவர்களுடன் கூட இருந்து அழவேண்டும்! ஏன் ஆண்பிள்ளைகளை இங்கு நியமிக்கக் கூடாது? இந்த வேலைக்காரரே மகா காமதுரர்கள். ஒரு நொடியேனும் பெண் பிள்ளைகளை அப்பால் விடுவதில்லை. பெண் பித்துப் பிடித்தவர்கள்! இப்படி நோயாளிக் கருகில் யெளவனப் பெண்களை வைத்தால், அவர்களுடைய பல ஹீனமான நிலையில் அவர்களுடைய மனதில் ஸ்திரீ சபலம் ஏற்படுமானால், அவர்களுடைய நோய் அதிகப்படுமன்றி விலகுமா? ஆண்பிள்ளைகளின் பணிவிடைகளிலும் பெண் பிள்ளைகளின் பணிவிடைகள் சிறந்தனவாயினும், பின்னவர் களால் உண்டாகும் தீமையே பெரிய தென்பதை இந்த இங்கிலீஷ் வைத்தியர்கள் உணராது போனதென்ன நோயாளிகள் எப்படி நாசமாய்ப் போனால் அவர்களுக்கென்ன தாங்கள் வேலை செய்யும் இடங்களில் கூட பெண்கள் எதிரில் நிற்பது அவர்களுக்குச் சுகமாக இருக்கிறது. அவ்வளவே அவர்களுடைய கோரிக்கை; இந்த வெள்ளைக் காரப் பெண்ணின் துடுக்கையும் துணிவையும் என்னவென்று சொல்வது நான் இவளைப் பார்த்தவுடன் எனக்கு என்ன தேவை என்று இவள் கேட்டது நியாயமே, அதன் பிறகு நான் கண்களை மூடியதைக் கண்ட இவள் என்னுடைய நெற்றியையும், கன்னங்களையும் தடவிக் கொடுத்ததன் காரணமென்ன? அவ்வாறு செய்யும்படி இவளைக் கேட்டவர் யார்? அது இவளுடைய கடமையி லொன்றோ? இவர்கள் நோயாளிகளிடத்தில் அவ்வளவு அந்தரங்கமான அன்பைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/150&oldid=1252165" இலிருந்து மீள்விக்கப்பட்டது