உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

மேனகா

உங்களுடைய சட்டைப் பையிலிருந்த இரண்டு கடிதங்களை எடுத்து அவர்களிடம் கொடுக்க, அவர்கள் அதிலுள்ள விஷயங்களை அறிந்து கொண்டவுடன் மிகவும் ஆத்திரமடைந் தார்கள். அவர்களுக்குப் பதினைந்து நிமிஷம் சாவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது; அது முடிந்து போன தாகையால், அவர்களை உடனே நாங்கள் வெளியிற் போகச் சொல்லி விட்டோம். அதற்கப்புறம் அவர்கள் இன்னம் வரவில்லை”

என்று கூறினாள்.

அதைக் கேட்ட வராகசாமி ஒருவகையான அருவருப்பை யடைந்தான்; மேனகாவின் மீது அவன் கொண்ட வெறுப்பு அவர்கள் மீதும் சென்றது. அவர்கள் கெட்டவர்களாகையாலும், தஞ்சையில் சுயேச்சையாக அவர்கள் அவளை நாடகம் பார்க்க விட்டிருந்ததாலும், மேனகா அவ்வாறு ஒடிப்போனா ளென்றும், தங்களுக்குண்டான அவமானத்திற் கெல்லாம் அவர்களே காரணமென்றும் நினைத்து அவன் பெரிதும் ஆத்திரமடைந்தான். அந்தப் பெண்ணிடம் எதைச் சொல்லலாம் எதைச் சொல்லக்கூடாது என்பதை யோசனை செய்யாமல், அவர்களைப்பற்றி அவதூறாகப் பேசத் தொடங்கினான். “அவர்களுடைய விசனம் அந்த ஒரு நாளோடு முடிந்து விட்டது போலிருக்கிறது. எல்லாம் பெண்ணுக்காகப் போடும் வேஷம். மாப்பிள்ளையைப் பற்றி மாமனார்களுக்கு அந்தரங்கத்தில் அபிமானம் ஏது? பெண் இருக்கிறாளென்று நினைத்து, அவளுக்காக முதலில் பாசாங்கு செய்தார்கள் போலிருக்கிறது. பெண் போய்விட்டாள் என்பதை அறிந்தவுடன் இனிமேல் மாப்பிள்ளையின் தயவு எதற்கென்று போய்விட்டார்கள். அப்புறம் அவர்கள் ஏன் வருவார்கள்?” என்று மிகவும் குத்தலாகவும் அதிருப்தியோடும் கூறிக்கொண்டான். அதைக் கேட்ட அந்த வெள்ளைக்காரப் பெண்ணின் முகம் ஒருவகையாக மாறுதல் அடைந்தது. அவள் தனது முகத்தை அப்புறம் திருப்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/157&oldid=1252172" இலிருந்து மீள்விக்கப்பட்டது