உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதாள எட்சினி வசியம்

175

அப்போது நைனா முகம்மது அவனை நோக்கி, “மாமனாரே போலீசுக்கு எழுதிவிட்டா ரென்றா மந்திரவாதி சொன்னார்? அப்படியானால் நான் தப்பமுடியாது. நூர்ஜஹானும் எனக்கு விரோதமாக சாட்சி சொல்லுவாள்” என்று மிகவும் அச்சங்கொண்டு கூறினான்.

சையது இமாம்:- அந்த மந்திரவாதிகள் அதற்குத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து உங்களுக்கு எவ்வித ஆபத்தும் வராமல் பாதுகாக்கிறேனென்று சொல்லுகிறாரே! இனிமேல் அதைப் பற்றி கவலைப் படுவதேன்? அவர் மலையாளத்து மந்திரவாதி; மகா கெட்டிக்காரர்; என்னவோ ஆண்டவன் செயலாகத்தான் அவர் நம்முடைய வீடுதேடி வந்தார்- என்றான்.

நைனா:- அவர் மந்திரவாதி என்பதை நீ எப்படி அறிந்து கொண்டாய்?

சையது :- அவர் தெருவின் வழியாகவே வந்துகொண்டிருந்தார்; அப்போது வெயிலின் கொடுமை சகிக்க முடியாம லிருந்தது. கால் பொசுங்கிப் போனது. அப்போது தெருவின் வழியாக வெறுங்கா லோடு வந்த மந்திரவாதி சூட்டைத் தாங்கமாட்டாமல் தவித்துப்போய், நம்முடைய வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு கொப்பளித்துப் போன தமது காலை எனக்குக் காட்டினார். வீட்டில் தேனிருந்தால் கொஞ்சம் கொப்புளத்தில் தடவுவதற்குக் கொடுக்கும்படி கேட்டார்; நான் கொஞ்சம் தேன் கொடுத்தேன். அதை வாங்கித் தடவிக்கொண்டு கால் நாழிகை நேரம் உட்கார்ந்திருந்தார். பிறகு எழுந்து போகுமுன், தாம் மலையாளத்து மந்திரவாதி யென்றும், அந்த வீட்டு எஜமான் அப்போது ஒரு பெருத்த ஆபத்தில் மாட்டிக்கொண்டு ஒளிந்துகொண்டிருப்பதாகவும் என்னிடம் தெரிவித்தார். நான் திடுக்கிட்டு அவரை நோக்கி, “என்ன விதமான ஆபத்து என்று கேட்டேன். பெண் விஷயமான ஆபத்தென்றும், அதற்குத் தக்கபடி வேலை செய்யாவிட்டால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/176&oldid=1252327" இலிருந்து மீள்விக்கப்பட்டது