உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதாள எட்சினி வசியம்

177

இருபத்தைந்து வயதிருக்கலாம். அவர் நன்றாய்ச் சிவந்த மேனியைக் கொண்டிருந்தார்; தலையில் ஒரு குல்லா அணிந்து அதற்குமேல் பெருத்த சீட்டுத் துணித் தலைப்பாகை அணிந்திருந்தார். கருத்தடர்ந்த தாடி பக்கங்களில் செவிகள் வரையிலும், கீழே மார்பு வரையிலும் எட்டி செழுமையா யிருந்தது. இடையில் கைலியும் (லுங்கியும்), அதற்குமேல் காஷாய அங்கியும் அவர் தரித்திருந்ததன்றி, கழுத்தில் ஜெபமணி மாலை, பளிங்குமணி மாலை முதலியவற்றை அணிந்திருந்தார். கண்களில் மைதீட்டிக் கொண்டிருந்தார்; கொளுத்தப்பட்ட ஊதுவர்த்தி யொன்றை வலது காதிற்கும் தலைபாகைக்கும் இடையில் சொருகிக்கொண்டிருந்தார். அதிலிருந்து வெளிப்பட்ட புகை பரிமள கந்தத்தை வெகுதூரம் வீசியது. கையில் ஒரு அர்த்த சந்திரக்கவைக் கோலும், ஒரு சிறிய துணி மூட்டையும், சுரைக்குடுக்கையிலிருந்து செதுக்கிச் செய்யப்பட்ட தூக்குச் செம்பொன்றும் ஒர் ஒலைச் சுவடியும் இருந்தன. அந்த மகானைக் கண்ட சையது இமாம் எழுந்து தரையோடு தரையாய்க் குனிந்து சலாம் செய்ய, அவரும் பணிவாக அவனுக்குச் சலாம் செய்தார். உடனே சையது இமாம் அவரை அழைத்துக்கொண்டு அடுத்த தெருவிலிருந்த தனது வீட்டையடைந்து உட்புறத்தில் அவரை அழைத்துச் சென்றான். அந்த மந்திரவாதி அவனோடு பேசாமல் பின் தொடர்ந்து சென்றாராயினும், அவர் ஏதோ மந்திரத்தை ஜெபித்து முணுமுணுத்துக் கொண்டே நடந்தார். அவ்விருவரும் வந்ததைக் கண்ட நைனாமுகம்மது விரைவாக எழுந்து மிகவும் பணிவோடு மந்திரவாதிக்குச் சலாம் செய்து, அவரை ஓர் ஆசனத்தில் அமரச்செய்து மரியாதையாக நிற்க, மகான் அவனுக்கு உட்காரும்படி தமது கையசைப் பால் அநுமதி கொடுத்தார். அவ்வாறே அவனும் உட்கார்ந்து கொண்டான். பிறகு மந்திரவாதி சையது இமாமைப் பார்த்து, “நீங்களிருந்த அந்த வீட்டுக் கதவைத் திறந்து போட்டு வந்தீர்களே! அங்கே

மே.கா.II-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/178&oldid=1252332" இலிருந்து மீள்விக்கப்பட்டது