உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

மேனகா

என்றார். அதைக் கேட்ட நைனாமுகம்மது பெரிதும் மகிழ்ச்சி அடைந்தவனாய், எழுந்து மந்திரவாதிக் கெதிரில் மண்டியிட்டு வணங்கி, “மகானே! நீங்கள் இந்தக் காரியங்களைச் செய்வீர்களானால், என்னைப்போன்ற பாக்கியவான் யாரிருக்கப் போகிறான். நீங்கள் என்னிடம் ரூபா பதினாயிரம் கேட்டாலும் தருகிறேன்; உங்களுக்குப் பணம் தேவையில்லை யேனும், நீங்கள் வேறு யாருக்குக் கொடுக்கச் சொன்னாலும் கொடுக்கத் தடையில்லை” என்று கூறி வேண்டினான்.

மந்திர:- இவைகள் எல்லாம் முடிந்து போனதென்றே நீர் நினைத்துக் கொள்ளலாம். எனக்குப் பணமே தேவையில்லை; நாளைக்குக் காரியம் முடிவான பின் மறந்து போகாமல் நாகூர் தர்காவுக்கு இரண்டாயிரம் ரூபாய் அனுப்பிவிடும். தவிர, இந்த ஊரில் பதினாயிரம் பக்கிரிகளுக்கு மூன்று நாட்களுக்கு சாப்பாடு போடும். அதுவே போதும்.

நைனா:- அவசியம் அப்படியே செய்கிறேன். அந்த பிராம்மணப் பெண்ணும் நாளை என்னிடம் வந்து விடுவாளா?

மந்திர:- ஆகா! அவசியம் வருவாள். அவள் விஷயத்தில் இன்னொரு காரியமும் உமக்குச் செய்து கொடுக்கிறேன். அந்தப் பெண் இனிமேல் உம்மிடமிருப்பதை எவரும் கண்டு பிடிக்க முடியாமல் ஒரு தடைக்கட்டுச் செய்து தகடு தயாரித்துத் தருகிறேன். அதை அவளை நீர் வைத்திருக்கும் வீட்டின் வாசற்படிக்குள் அடித்து வைத்தால், அவள் அந்த வீட்டிலிருப் பதை எவரும் காணமுடியாது. ஒருகால் அந்தத் தகட்டையே யாராகிலும் அபகரித்துக்கொண்டு போய் விட்டாலும், சட்டம் உம்மைத் தொடராதிருக்கும்படி உமக்கு இன்னொரு காரியமும் செய்து வைத்து விட்டுப் போகிறேன் என்றார்.

அவற்றைக் கேட்ட் நைனாமுகம்மது பூரித்துப் புளகாங்கித மடைந்து மெய்மறந்து அளவளாவினான். வணங்கா முடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/185&oldid=1252344" இலிருந்து மீள்விக்கப்பட்டது