பக்கம்:மேனகா 2.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதாள எட்சினி வசியம்

193

தமையால், பத்து நிமிஷ நேரம் பேசமாட்டாமலும், அசைய மாட்டாமலும் அவர் அப்படியே தரையில் கிடந்தார்; பிறகு கண்களை மெல்லத் திறந்து அருகிலிருந்த உயிர் கொடுத்த பேருபகாரிகளை நன்றியறிதலோடு நோக்கினார்; நாற்புறங்களையும், தாமிருந்த விடத்தையும் கவனித்துப் பார்த்தார். தாம் அதுவரையில் இரயிலில் அறைபட்டுக் கொல்லப்படாததன் காரணம் என்ன வென்பதை அவர் அப்போதே அறிந்தார். அந்த ஸ்டேஷன் நான்கு ரயில்கள் கூடும் நாற்சந்தி யென்பது முன்னரே கூறப்பட்ட தல்லவா? அந்த ஸ்டேஷனில் இரயில் வண்டிகளும், சாமான் வண்டிகளும் ஒதுக்கப்படுவதற்கு, இருபது முப்பது பாதைகள் அரை அரை பர்லாங்கு தூரத்தில் அமைக்கப்பட்டிருந்தன. தஞ்சைக்கு இரயில் போகும் முக்கியமான பாதை, நெடுந்துரத்திற்கு அப்பால் இருந்தது; அவரிருந்த பாதை, வண்டி ஒதுக்கப்படும் பாதைகளில் ஒன்று. கள்வர் குடிவெறியில் அதைக் கவனிக்காமல் முதலிலிருந்த பாதையில் அவரைக் கட்டிவிட்டுச் சென்றனர். அந்த உண்மையை அப்போதே கண்டறிந்த சாமாவையர் பெரிதும் சந்தோஷ மடைந்தவராய் மெல்ல வாயைத் திறந்து, “நீங்கள் இன்னும் ஐந்து நிமிஷ நேரம் வராதிருந்தால், என் உயிர் போயிருக்கும். எனக்கு உயிர் கொடுத்த மகா உபகாரிகளான உங்களுக்கு நான் என்ன பதிலுதவி செய்யப்போகிறேன். இந்த ராஜ்ஜியம் என்னுடையதா யிருந்தால், இதை அப்படியே உங்களுக்குக் கொடுத்திருப்பேன்" என்று கூறிய வண்ணம் எழுந்து உட்கார்ந்தார். இன்னமும் உடம்பு சரியான நிலைமைக்கு வராமைாயல், அவர் நன்றாக எழுந்திருக்கக் கூடவில்லை. நிற்க, அவரது இடையில் கோவண மொன்றே யிருந்தமையால் எழுந்திருக்கவும் அவர் வெட்கினார்.

அவர் கூறியதைக் கேட்ட கந்தன், “யார் சாமி இப்படிச் செய்தது? உங்களுடைய ஊர் எது சாமி?” என்றான்.

சாமாவையர், “அப்பா! நானிருப்பது பட்டணம். வர்த்தக

மே.கா.II-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/194&oldid=1252353" இலிருந்து மீள்விக்கப்பட்டது