பக்கம்:மேனகா 2.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதாள எட்சினி வசியம்

209

செய்தீர்? பணத்தை வாங்கிக்கொண்டு முதலாளியைச் சந்தியில் யிழுத்துவிட்டீரே!

சாமா:- (நடுநடுங்கி) இப்படி நடக்குமென்று நான் நினைக்கவே இல்லை. இப்போது இதற்கு என்ன யோசனை செய்திருக்கிறீர்கள்? எஜமானருக்கு ஆபத்து வராமலிருக்க, என்ன செய்ய வேண்டு மென்றாலும் அதை நான் செய்யத் தடையில்லை. என்னுடைய உயிரைக் கேட்டாலும் கொடுக்கத் தயார் - என்றார்.

உடனே மந்திரவாதி, “இதோ பாரும்; இந்தக் கடிதத்தை நான் எட்சினி தேவதையின் மூலமாக போலீஸ் கச்சேரியிலிருந்து வரவழைத்தேன்” என்று இன்னொரு கடிதத்தை நீட்ட, சாமாவையர் மிகுந்த ஆவலோடு அதை வாங்கிப் படித்து, முன்னிலும் அதிகரித்த பயத்தையும், திகைப்பையும் அடைந்தார். “என்ன இது எஜமானருடைய மாமனாரே பிராது எழுதி விட்டரே! இதற்கு நாம் என்ன செய்கிறது?” என்றார். அதற்குள் அவரது மனதில் கோடாது கோடி எண்ணங்கள் தோன்றி மறைந்தன. அது பொய்யோ மெய்யோவென்று சந்தேகித்தார். அதில் போலீஸ் முத்திரை இருந்ததைக் கண்டார். அது உண்மையான பிராதென்றே நினைத்துக் கொண்டார். அது எட்சினி தேவதையினாலேதான் வந்திருக்க வேண்டுமென்று அவர் உறுதியாக நினைத்தார். மந்திரவாதியிடத்தில் அவருக்குப் பெருத்த மதிப்பும், பயமும், மரியாதையும் ஏற்பட்டன. அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை ஆவலோடு எதிர்பார்த்தார். மந்திரவாதி சிறிது நிதானித்தார். இதற்கு இன்று ராத்திரி முழுதும் சுடலையில் பிணத்தின் மேல் உட்கார்ந்துகொண்டு நான் மந்திரம் ஜெபித்து, காவுகொடுத்து எட்சினியை வரவழைத்து வசியம் செய்யப் போகிறேன். இதனால், அவருடைய மாமனாரும், சம்சாரமும் நாளைக்கு அவருடைய வசமாய் விடுவார்கள். மேனகா வென்னும் பிராமணப் பெண்ணும் அவர்மேல் மோகங்

மே.கா.II-14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/210&oldid=1252384" இலிருந்து மீள்விக்கப்பட்டது