பக்கம்:மேனகா 2.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழம் நழுவி பாலில் விழுந்தது

249

தோன்றுகிறதே காரணமென்ன?” என்று விநயமாகக் கேட்க, வராகசாமி மிகவும் துயர மடைந்தவனாய், “என்னுடைய உடம்பு குணமடைவதைக் கண்டு எவ்வளவு சந்தோஷப் படுகிறாயோ, அவ்வளவுக்கவ்வளவு நான் விசனப்படுகிறேன். என்னுடைய வியாதி அதிகரிக்கக் கூடாதா என்று நான் சுவாமியை வேண்டுகிறேன்” என்றான்.

அதைக் கேட்ட பேதையான அந்த நங்கை தான் இல்லாத காலத்தில் சகோதரிகள் அவனிடம் ஏதோ கலகம் விளைந் திருப்பதாக உடனே நிச்சயித்துக்கொண்டு புன்னகை செய்தவளாய் அவனிடம் நெருங்கி, “சீக்கிரமாக உடம்பு குணமடைந்து போனால், உங்களுடைய மனைவியைத் தேடி, அவள் காணாமல் போன விவரத்தை ஆராய்ந்தறிய வேண்டு மென்று இதுவரையில் சொல்லிக் கொண்டிருந்த நீங்கள், இப்போது அதற்கு மாறாகப் பேசுகிறீர்களே காணாமல் போனவளைப்பற்றி ஏதாகிலும் செய்தி கிடைக்காதா? ஏன் இப்படி வருந்தவேண்டும்? உடம்பு நன்றாகச் செவ்வைப் படும் சமயத்தில், இப்படி அலட்டிக்கெள்ளலாமா?” என்று கேட்டவண்ணம் அவனது காலைத் தொட்டு வருடினாள்.

அதைக்கண்ட வராகசாமியின் துக்கம் அதிகரிக்க, கண்களிலும் கண்ணீர் பொங்கி யெழுந்தது; “ஆகா! விஷயத்தை நான் என்ன வென்று சொல்லுவேன் நினைக்க நினைக்க எனக்கே சகிக்கவில்லை. நீ அதைக் கேட்டால் ஆச்சரியமடைவாய்” என்றான்.

பணிப்பெண்:- அது, காணாமற் போன மனைவியைப் பற்றிய விஷயமா?

வராக:- இல்லை இல்லை; இவர்கள் எனக்கு வேறு கலியாணம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். நாளைக்கு நிச்சய தாம்பூலம் நடக்கப்போகிறதாம். இன்னும் ஐந்தாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/250&oldid=1252426" இலிருந்து மீள்விக்கப்பட்டது