பக்கம்:மேனகா 2.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

மேனகா

இந்த விஷயத்தை நியாய ஸ்தலத்தில் விசாரணைக்குக் கொண்டுபோக உங்களுக்கு விருப்பமானால் தயவு செய்து எழுதுங்கள். நான்தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ளுகிறேன். இதனால் உங்களுடைய சகோதரிக்கும் தண்டனை கிடைப்பதன்றி உங்களுக்கும் பெருத்த அவமானம் ஏற்படும். இப்போது சிலருக்கே தெரிந்த இந்த இழிவான காரியம் பத்திரிகைகளில் அடிபட்டு ஊரூராய்ப் பரவும்; இதனால் உங்களுக்கு அவமானம் ஏற்படுமன்றி, எவ்விதமான அநுகூலமும், உண்டாகப் போகிறதில்லை. ஆனால், குற்றிவாளிகளைத் தண்டித்தோ மென்னும் ஒரு திருப்தி உண்டாகும் என்பதில் ஆக்ஷேபணையில்லை. நைனா முகம்மது மரைக்காயர் என்பவர் ஒன்றும் அறியாத சிறுவர்; துர்மந்திரியான சாமாவையருடைய போதனையால் அவர் இந்தக் காரியத் திற்கு உடன் பட்டார். என்றாலும், அவரைத் தண்டனைக்குக் கொண்டு வருவது நியாயமான காரியமே. ஆனால் அவரைத் தண்டனைக்குக் கொண்டு வருவதில், உங்களுடைய சகோதரியும் சிறைச்சாலைக்குப் போக நேரிடும்; உங்களுக்கு இழிவும் உண்டாகும். இவைகளைக் கருதி அவரைத் தண்டனைக்குக் கொண்டு வருவதற்கு நீங்கள் விரும்பமாட்டீர் களென்று நினைத்தே, உங்களுடைய அபிப்பிராயத்திற்கு இதை விட்டிருக்கிறேன். உங்களுக்கு விருப்பமானால், நான் உடனே நடவடிக்கை தொடங்குகிறேன்.

இந்த விஷயங்களைப்பற்றி நான் இரகசியமாகவே விசாரணை செய்தேன். செய்தபோது இன்னும் இரண்டொரு விஷயங்கள் வெளியாயின. அவற்றையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுவது அவசியம்.

நாடகக்காரனான மாயாண்டிப்பிள்ளை இந்த விஷயத்தில் உண்மையில் சம்பந்தப்பட்டிருக்கிறானா வென்பதைக் கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/263&oldid=1252439" இலிருந்து மீள்விக்கப்பட்டது