உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270

மேனகா

அதனால் அவனுக்கு என்ன கெடுதல் சம்பவிக்குமோ வென்று கவலை கொண்டு தவித்தாள்; பலவகையான சிகிச்சைகளை அரைநாழிகை நேரம் வரையில் அவள் செய்ய, அவன் திரும்பவும் விழித்துக் கொண்டான். அந்த மடந்தை அருகில் உட்கார்ந்து அவனைத் தன் மீது சார்த்திக்கொண்டு ஏதோ ஒரு மருந்தைப் பருகுவித்தாள். அவன் அப்போதும் குழம்பிய மனதோடு வெறு வெளியையும், தனக்கருகிலிருந்த பெண்மணியையும் நோக்கினான். கண்ணீர் வழிந்தது. “ஐயோ! மேனகா! உன்னை மேனகா என்று லக்ஷம் தடவை இனி நான் கூப்பிட்டாலும் உன்னுடைய அழகான முகத்தை இனி நீ காட்டுவாயோ; ஆகா! உன்னைப் பெண்தெய்வமென்றே சொல்லவேண்டும்! உன்னைக் கோவில் வைத்து வணங்கினாலும் தகும். பூலோகத்தில் மனிதன் அடையக்கூடிய பெரும் பேற்றை யெல்லாம் எனக்கு உதவிய கற்பக்த் தருவாகிய உன்னையடைந்தும், சுகப்படக் கொடுத்துவைக்காத அதிர்ஷ்ட ஹீனனான எனக்கு இனி உன்னைக் காட்டிலும் மேலான எந்தப் பொருள் கிடைக்கப்போகிறது? நீ என்னை விட்டுப்போன பின், இனிமேல் நானும் உயிரோடிருந்தால், எனக்கு ஒயா விசனமே மிச்சமாகும். நானும் உயிரை விடுவதே இத்தனை விசனங்களுக்கும் மருந்து; என் உயிரே, என் கண்மணியே! என் கட்டிக்கரும்பே! கிளியைப் போலக் கொஞ்சுவாயே! நினைப்பதை யெல்லாம் காமதேனுவைப்போலக் கொடுப் பாயே! படித்தவள், கெட்டிக்காரி, பெரிய மனிதருடைய புத்திரி, என்ற அகம்பாவம் கொஞ்சமாகிலும் உண்டா! அதிர்ந்த சொல்லுண்டா! என் அதிர்ஷ்ட லக்ஷுமியாகிய நீ என்னைவிட்டுப் போக மனங்கொண்டாயோ! எல்லா வற்றையும் நன்றாக அறிந்த நீ தற்கொலை செய்து கொள்ள நினைத்தது ஆச்சரியமாக இருக்கிறதே! எத்தனையோ துன்பங்களுக் குள்ளாகியும் உன்னுடைய கற்பைக் காத்துக் கொண்ட நீ என்னிடம் வந்து சேரக்கூடாதா? நான் உன்மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/271&oldid=1252447" இலிருந்து மீள்விக்கப்பட்டது