பக்கம்:மேனகா 2.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழம் நழுவி பாலில் விழுந்தது

273

நிலைமையைக் கண்டு அச்சமும் நடுக்கமும் கொண்ட அந்த இளநங்கை, தன்னாலியன்ற வரை பெருமுயற்சி செய்து அவனது துயரத்தையும், கோபத்தையும் மாற்றிய வண்ணம் இருந்தாள்; அவன் ஆறுதலே அடையாமல், தன்னையும் உலகையும் தனக்கருகிலிருந்த அந்த இன்பவல்லியையும் மறந்து தனது வேதனைகளிலேயே மூழ்கிக் கிடந்தான். அப்போது, அவனுக்கு ஆகாரம் கொடுக்கும் வேளை வந்தது; பெருந்தேவியும், கோமளமும் வழக்கப்படி ஆகாரம் ஜலம் முதலியவற்றை எடுத்துக் கொண்டு கதவைத் திறந்தனர். அதைக் கண்ட பணிமகள் அவர்களை வராகசாமியிடம் அப்போது விடக்கூடாதென்று நினைத்து, விரைவாக எழுந்து கதவண்டையில் ஒடி, வழிமறைத்து நின்று, “உடம்பு சரியான நிலைமையில்லை; இப்போது ஆகாரம் சாப்பிடமாட்டார்; இன்னம் அரைமணியில் நானே வந்து சொல்லுகிறேன். அப்போது கொண்டுவரலாம்” என்றாள். அதைக் கேட்ட பெருந்தேவியம்மாள் ஒருவாறு ஆத்திர மடைந்தவளாய், “கொஞ்ச நாழிகைக்குமுன் கோமளம் கடுதாசியைக் கொடுத்தபோது சரியாயிருந்த உடம்பில் இதற்குள் என்ன வந்துவிட்டது! உன்னுடைய அதிகாரம் கண்டிப்பா யிருக்கிறதே. புது மணியக்காரன்வந்து நெருப்பைக் கட்டிக் கொளுத்தி னானாம் என்பார்கள். அதைப் போல யாரோ வழியில் போகிறவளான நீ வந்து எங்களை அதிகாரம் செய்கிறாயே! எங்கள் வீட்டுப் பையனுக்கு உடம்பு சரியாக இல்லாவிட்டால் அதை நாங்கள் வந்து பார்க்கவேண்டாமா! எல்லாவற்றிற்கும் நீதான் அதிகாரி போலிருக்கிறதே! காணாமற் போன பெண்டாட்டிக்குமேல் நீ பெரும் பெண்டாட்டியாய் விட்டாய் போலிருக்கிறதே விடிந்தால் நிச்சய தாம்பூலம்; இதுவரையில் சரியாயிருந்த உடம்பை நீதான் எப்படியோ கெடுத்திருக்கிறாய். இதற்குத்தான் வெள்ளைக் காரருடைய வைத்தியமே

உதவா தென்று சொல்லுகிறது. வியாதியா யிருக்கிற

மே.கா.II-18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/274&oldid=1252450" இலிருந்து மீள்விக்கப்பட்டது