உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழம் நழுவி பாலில் விழுந்தது

279

முடியவில்லை யென்றும் இதுவரையில் நீங்கள் சொல்லிக்கொண்டு வந்ததெல்லாம் பொய்தானே? என்மேல் அவ்வளவு வாஞ்சை வைத்தவர்களானால், என்னை விட்டு இறந்துபோக நினைப்பீர்களா? இப்படிச் செய்வதுதான் நியாயமா? நானும் இத்தனை நாட்கள் உங்களோடு இருந்து பழகினேன். உங்களுடைய மேன்மையான குணத்தையும், கபடமற்ற அன்பையும் காணக்கான, என்னுடைய மனதிலும் ஒரு வகையான வாத்சல்யம் உண்டாகிவிட்டது. உங்களுடைய நோய் நீங்கின பிறகு உங்களை விட்டு எப்படிப் பிரிந்து போகிற தென்னும் கவலையும் விசனமும் சென்ற சில நாட்களாக என்னை வதைத்துக் கொண்டிருக்கின்றன. பல வருஷங்களுக்கு முன் விட்டுப் பிரிந்த நண்பர் ஒருவரை யொருவர் கண்டு கூடியதைப்போல, நாமிருவரும் ஒருவரை யொருவர் கண்ட நேரம் முதல், இருவர் மனதிலும் ஆசையும், அன்பும், பற்றும் சுரந்து கொண்டே இருக்கின்றன. சென்ற இரண்டொரு நாட்களாக என் மனதின் நிலைமையை நான் ஊன்றிப் பார்த்தேன். அது விபரீதமாகத் தோன்றுகிறது. அதை வெளியிட நான் இதுவரையில் வெட்கப்பட்டுக்கொண்டிருந்தேன். இப்போது உங்களுடைய சம்சாரம் இறந்து போய்விட்டாள் என்ற செய்தியை அறிந்த பிறகு என்னுடைய மனதை வெளியிடத் துணிவு கொண்டேன். உத்தரவானால் சொல்லுகிறேன்” என்று மகிழ்ச்சி தவழ்ந்த முகத்தோடு விநயமாகக் கூறினாள். அதைக் கேட்ட வராகசாமி முற்றிலும் திகைப்படைந்தவனாய்ச் சிறிது மயங்கி, “உன் மனதை வெளியிடு” என்றான். அதைக்கேட்டு வெள்ளை மடமங்கை மகிழ்வோடு அவனது முகத்தை நோக்கி கேட்ட வண்ணம், “என் மனதை நீங்கள் இன்னமும் அறிந்துகொள்ளவில்லையா? அதை என் வாயாலேயே வெளியிடவும் வேண்டுமா? நான் கேட்கப்போவதை நீங்களே சொல்லிவிட்டீர்களே! மேனகாவுக்குப் பிறகு என்மேலேதான் நீங்கள் பிரியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/280&oldid=1252457" இலிருந்து மீள்விக்கப்பட்டது