உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

மேனகா

பெருகின. அவன் தனது சகோதரிகளைத் தாறுமாறாக வையத் தொடங்கினான். “அடீ போக்கிரி முண்டைகளா! அவளைத் தொடவேண்டா மென்கிறேன்; அவளை அடிக்கிறீர்களா! இதோ உங்களுடைய மண்டையைப் பிளந்து விடுகிறேன். கொலை பாதகிகளா! அவளை யாரென்று நினைத்தீர்கள், மேனகாவல்லவா அவள்; இனிமேல் அவளைத் தொட்டால், உங்களுடைய உயிரை வாங்கிவிடுவேன்” என்று பெருங்கூச்சலிட்டு அதட்டிக் கூறினான். அதற்குள் பணிமகளின் மேலிருந்த வெள்ளைக்கார உடைகளை யெல்லாம் சகோதரிகள் கிழித்தெறிந்து விட்டனர்.

அப்போது கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாக, வெள்ளைக்கார உடைக்குள்ளிருந்து மேனகா வெளிப்பட்டாள். அவள் தனது அழகிய பட்டுப் புடவையை உட்புறத்தில் உடம்போடு உடம்பாக இறுக்கிக் கட்டிக்கொண்டிருந்த காட்சி; கண்கொள்ளாத அற்புதக் காட்சியாக இருந்தது. அவ்விரு சகோதரிகளால் மேனகா மிகவும் வருத்தப்பட்டபோது, அவளது முகத்திலிருந்து வியர்வை ஒழுகிய தாகையால், அது அவளது முகத்திலிருந்த வெள்ளை மாவை முற்றிலும் கலைத்து அலம்பிவிட்டது. தலையின் பின்னல்களைத் தவிர, மற்ற பாகங்களிலிருந்து, அவள் மேனகாதான் என்பது எல்லோர்க்கும் தத்ரூபமாக உடனே தெரிந்தது; அவ்வாறு வெள்ளைக் காரிக் குள்ளிருந்து மேனகா தோன்றியது பீதாம்பரய்யர் ஜாலத்தைப்போல விருந்தது. அவள் மேனகா வென்பது தெரிந்தவுடன், சகோதரிகள் அவளை விட்டு விட்டனர். மேனகாவோ, தான் அடிபடுவதைச் சிறிதும் பொருட் படுத்தாமல், தனது கணவன் கட்டிலை விட்டு எழுந்து வந்து கீழே வீழ்ந்து விடுவானோ வென்று பெரிதும் கவலையும் அச்சமுங்கொண்டு கட்டிலண்டை ஓடி வராகசாமியை அமர்த்தினாள். எதிர்பாராத அந்த மாறுதலைக் கண்ட சகோதரி களிருவரும் திகைத்து, திக்பிரமை கொண்டு ஒன்றும் தோன்றப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/291&oldid=1252467" இலிருந்து மீள்விக்கப்பட்டது