பக்கம்:மேனகா 2.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304

மேனகா

யோடினர்; பங்களாவை விட்டு வெளியிற் போகும் நினைவோடு காலை யெடுத்து வைத்த வரதாச்சாரியார் முதலியோர், திகைப்படைந்தவராய் திருடனைக் கண்டு பிடிக்கும் வரையில் தாம் வெளியிற் போகக் கூடாதென்று நினைத்து அவமானத்தினால் குன்றிப்போய் நின்றனர். சரியான பகல்வேளையில் திருடன் வருவானோ வென்ற வியப்பும் இயமும் அங்கிருந்த ஒவ்வொருவர் மனதிலும் குடிகொண்டு வதைத்தன.

இரண்டு நிமிஷ நேரத்தில் போலீஸ் ஜெவான்கள் நால்வரும், திருடனைப் போலக் காணப்பட்ட ஒரு முரட்டு மனிதனை இழுத்துக் கொண்டு வந்தனர். பின்னால் வந்தவளான பங்களாப் பெருக்கும் வேலைக்காரி, “என்ன அதிசியங்கறேன்! பட்டப்பகல்லே திருடன் பங்களாக்குள்ளாற வருவானோ பனமரம் கணக்கா எம்பிட்டு ஒசரங்கறேன்! நல்லா இடுப்ப முறிங்க!” என்று வியப்போடு உரக்கக் கூவிக்கொண்டு ஒடி வந்தாள். அவளோடு கூட வந்த தோட்டக் காரன், “பணம் நவை உடுப்பு எல்லாம் வச்சிக்கிற அறையப் பாத்துல்ல நொளஞ்சுக்கினான்! நாங்க கூச்சப் போட்ட ஒடனே பூத்தொட்டி மறவுலேல்ல ஒளியறான். நானா உட்றவன்! தடியாலே நல்லா மொத்திட்டேன்” என்று கூறி தனது கையிலிருந்த மூங்கில் தடியைத் துக்கி, இன்னமும் அடிக்க நினைப்பவனைப் போலக் காட்டினான். அவ்வாறு அவர்களிருவரும் தங்களது கீர்த்தியை வெளியிட்டபோது, அந்தத் திருடன் சஞ்சீவி ஐயருக்கு முன்னால் கொணர்ந்து நிறுத்தப்பட்டான். அவனை யாவரும் வலுவாக அடித்து விட்டன ராதலின், அவனது தேகத்திற் பலவிடங்களி லிருந்து இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. அவன் மயக்கங் கொண்டு துவண்டு விழுந்து தத்தளித்தவனாய், தனக்கு இன்னமும் எவ்விதமான தண்டணை கிடைக்குமோ வென்று பயந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/305&oldid=1252481" இலிருந்து மீள்விக்கப்பட்டது