உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306

மேனகா


அதைக் கேட்ட அந்த மனிதன் தனது துணியிலிருந்த ஒரு முடிப்பை அவிழ்த்தவண்ணம், “காலையில் இருந்து எங்கெங்கே அலெஞ்சேனுங்க! அந்த அம்மாளேக் கண்டுபிடிக்க முடியல்லிங்க. ரயிலடியில் இக்குதே ராமசாமி முதலி சத்தரம்; அந்த சத்திரத்துலே இருப்பாங்க, கடுதாசியைக் குடுன்னு, அந்த ஐயா சொன்னாரு அங்கே போனேன், இல்லே. அங்கே இருந்த காவக்காரன், யாராச்சும் தேடிக்கிட்டு வந்தா தொளசிங்கப் பெருமா கோயிலு தெருவுலே சாமா ஐயருன்னு ஒரு ஐயரு இருக்கறாரு அவரு ஆட்டுக்கு அனுப்பச் சொன்னாங்கன்னு சொன்னான். அங்கே போயிப் பாத்தேனுங்க தெரியுமா! இந்தக் கடுதாசியைப் பாருங்க. எல்லா வங்களாலேயும் தொரை மாரும், துலுக்கரும் இருக்காங்க. இந்த ஒரு வங்களாலேதான் ஐயமாரு இருக்கறாங்கன்னு கேள்விப்பட்டேன். இத்தேப் பாருங்க” என்று துணி முடிப்பிற்குள் துகையலாய்ப் போயிருந்த ஒரு காகிதத்தை எடுத்து நீட்டினான். சஞ்சீவி ஐயர் அதை வாங்கிப் பார்த்தார். அதன் மேல்விலாசம் அடியில் கண்டபடி எழுதப் பட்டிருந்தது.

”சென்னை பட்டணம் பார்க்கு ஸ்டேஷனுக் கருகிலுள்ள சர் சவலை இராமசாமி முதலியார் சத்திரத்தில் இறங்கி யிருக்கும், தஞ்சாவூர் டிப்டி கலெக்டர் சுவாமிகளுடைய தாயார் கனகம்மாள் அவர்களுக்கு அனுப்பும் செங்கற்பட்டிலிருக்கும் ரெங்கராஜு”

என்று எழுதப்பட்டிருந்ததைப் படித்த சஞ்சீவி ஐயர் வராகசாமி இருந்த அறைக்குள் புன்னகை செய்தவண்ணம் நுழைந்து, “செங்கற்பட்டிலிருந்து ஒருவன் கடிதம் கொண்டு வந்திருக்கிறான். அவன் வழிதெரியாமல் பங்களாவுக்குள் நுழைந்துவிட்டான். அதற்குள், எல்லாரும் திருடன் திருடனென்று கூக்குரலிட்டு அவனை அடித்து முட்டாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/307&oldid=1252483" இலிருந்து மீள்விக்கப்பட்டது