பக்கம்:மேனகா 2.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318

மேனகா

அளவிலடங்காது; எங்களுடைய ஆவல் சகிக்கக்கூட வில்லை. எங்கள் மேல் அன்பு கூர்ந்து உடனே விஷயங்களைத் தெரிவிக்க வேண்டுமாய் தங்கள் பாதங்களில் சாஷ்டாங்க தெண்டனிட்டுக் கேட்டுக் கொள்ளும் தங்கள் நிரந்தரமான சேவகன் ரெங்கராஜு.”

என்று மேனகா கடிதத்தை முற்றிலும் மிகவும் பாடுபட்டுப் படித்து முடித்தாள். எத்தகைய கல் நெஞ்சரது மனத்தையும் இளக்கி உருக்கத்தக்க அத்தனை விஷயங்களைக் கொண்ட கடிதத்தை எவரும் படித்திருக்க மாட்டார்களென்பது மிகைப்படக் கூறிய தாகாது. கடிதத்தின் முடிவிலிருந்த விஷயங்களை உணர்ந்த வராகசாமி, மேனகா, கனகம்மாள், தங்கம்மாள் ஆகிய நால்வரும் எப்படிப்பட்ட நிலைமையில் இருந்தார்களென்பதை விவரித்துரைப்பதும் தேவையோ! அவர்கள் நால்வரும் தங்களுடைய பூத உடம்போடு அப்படியே சொர்க்க லோகத்தை யடைந்தவரைப்போ லாயினர். சாம்பசிவத்திற்கு நேர்ந்த துன்பங்களையும், ரெங்கராஜுவின் நிகரற்ற ஜீவகாருணிச் செயல்களையும், இறுதியில், கருணைவள்ளலாராகிய ஜெகதீசனது அருள் நோக்கால், தமது பேரிடர்களெல்லாம் சூரியன் முன் இருளெனப் பறந்து போனதையும் மாறி மாறி நினைத்து நினைத்து நெக்கு நெக்குருகி வாய்பேசா மங்கையராய் இன்பத்திலும் துன்பத்திலும் ஆழ்ந்து மிதந்து போயினர்.

சில நிமிஷங்களுக்குப் பிறகு தெளிவடைந்த வராகசாமி, கனகம்மாளை அன்போடு, “பாட்டீ! எனக்கு உடம்பு செளக்கியமாகி விட்டது. நாமெல்லோரும் இப்போதே புறப்பட்டு செங்கற்பட்டுக்குப் போவோம்” என்று கரை கடந்த மகிழ்ச்சியோடு கூறினான். அதைக் கேட்ட மேனகா, தன் கணவனது இணையற்ற அன்பையும், பற்றையும் கண்டு பெருங்களிப்பும் புன்னகையும் கொண்டு, “சரிதான்; காலைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/319&oldid=1252495" இலிருந்து மீள்விக்கப்பட்டது