பக்கம்:மேனகா 2.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334

மேனகா

சந்தோஷித்து வாழ, தாம் கடவுளை வேண்டிக் கொள்வதாக எழுதச் சொன்னார்கள். ஆகா! அவர்கள் மாத்திரம் இல்லா திருந்தால், உன்னுடைய கதி எப்படியா யிருக்கு மென்பதை நினைக்க இன்னமும் என் மனம் பதறுகிறது. சர்க்கார் வைத்திய சாலைக்குள் அன்னிய மாதாகிய உன்னைப் பணிப்பெண்ணைப் போல பொய் வேஷம் தரித்துக் கொண்டு போய் வைப்பது எவ்வளவு துணிகரமான காரியம்! அது மேலதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தால், அவர்களுடைய உத்தியோகமே போய்விடு மல்லவா! மகா துன்பகரமான விபத்தில் நீ இருந்தது பற்றி, தங்களுக்கு நேரக்கூடிய தீங்கையும் மதியாமல்; அவர்கள் இப்படிப்பட்ட மகா துணிகரமான காரியத்தைச் செய்தார்கள். அப்படிப்பட்ட அரிய பேருட காரியான அந்த அம்மாளை மாத்திரம் நாம் நமது உயிருள்ளளவும் நன்றி யறிதலோடு நினைத்தே தீரவேண்டும்.

என்னுடைய அன்பையும், ஆசையையும் கொள்ளை கொண்ட அருங்குண சகோதரியே! உங்களுடைய கூேடிமத்தை அப்போதைக் கப்போது எழுதி யனுப்பும்படி பன் முறையும் வேண்டுகிறேன்; உனக்கு சமஸ்த சாதனமும், சர்வ மங்களமும் உண்டாவதாக.

இங்கனம்


பிரியமான சகோதரி நூர்ஜஹான்

- என்றிருந்த கடிதத்தை மேனகா படித்து முடித்து வராக சாமியை நோக்கினாள்.

அவன் ஆநந்த சாகரத்தில் ஆழ்ந்து மிதந்தவனாய் மிகுந்த பிரேமையோடு அவளை நோக்கி, “அடாடா! என்ன பிரியம்! என்ன அன்பு! ஜாதியாவது மதமாவது! அன்பின் பெருக்குக்கு எதுதான் தடையாக நிற்கும்! எல்லா உயிர்களிடத்தில் சமமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/335&oldid=1252789" இலிருந்து மீள்விக்கப்பட்டது