உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டம்பாச்சாரி விலாசம்

37

வைத்திருக்கிறேன். தாலி கழுத்தில் ஏறியவுடன் “ரயில் தவறிப்போய்விட்டது போலிருக்கிறது. நான் ஊருக்குப் போய் உடனே அனுப்பி விடுகிறேன்” என்று சொல்லி விட்டு நீ ஊரைப் பார்த்துக் கம்பியை நீட்டிவிடு. அப்புறம் யோசித்துக் கொள்வோம். நீ பங்களாவுக்குப் பணம் கொடுத்து விட்டாயென்று முதலில் அவர்கள் வராகசாமியிடம் சொல்லி விடுவார்கள். ஆதலால் அப்புறம் இதைப்பற்றி ஒன்றும் சொல்லமாட்டாமல், திருடனுக்குத் தேள் கொட்டிய மாதிரி சும்மா இருந்து விடுவார்கள்.

வரதா:- அது நல்ல யோசனை தான். கலியாணம் பங்களாவிலா நடக்கும்?

சாமா:- அதையும் பேசி முடித்துவிட்டேன். கலியாணத்தை வீட்டில் நடத்தினால் ஐந்து நாள் ஆகும். உனக்குப் பணச்செலவும் அதிகமாகும். ஏதாவது ஒரு கோவிலில் செய்தால், ஒரு நாழிகையில் ஐந்து நாளைக் காரியத்தை முடித்துக் கொண்டு வந்துவிடலாம். அதனால் ஒரு தந்திரம் செய்திருக்கிறேன். இந்த பங்கஜவல்லி குழந்தையாயிருந்த போது மாந்தம் வந்ததாயும், இவள் பெரியவளான பின், திருப்பதி கோவிலில் வந்து கலியாணம் செய்து வைப்பதாய் அப்போது நீங்கள் பிரார்த்தனை செய்துகொண்டதாயும், அதன் படி கலியாணத்தைத் திருப்பதியில் செய்யவேண்டுமென்றும் சொல்லிவிட்டேன். அவர்கள் இணங்கிவிட்டார்கள். உனக்குக் கொஞ்சமும் துன்பமில்லாமல், எல்லா விஷயங்களையும் நான் முடித்துவிடுகிறேன். இதோ என்னிடம் ரூபா 9500 இருக்கிறது. பங்களா வாங்க 500 குறைவாகிறது. அதை மாத்திரம் நீ கொடுத்து விடு. மற்றதை முடித்து வைப்பது என்னுடைய பொறுப்பு.

வரதா:- சரி; இதைக் கிழவி கொடுத்த பணத்தை இப்படியே நீ எடுத்துக்கொள் - என்று தமக்கெதிரிலிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/39&oldid=1251852" இலிருந்து மீள்விக்கப்பட்டது