உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




17 வது அதிகாரம்

அணங்கோ ? ஆய்மயிலோ ?
(தொடர்ச்சி.....)


தன்னை மேனகா உற்று நோக்குவதைக் கண்ட நூர்ஜஹான் கன்றிற் கிரங்கும் தாயைப்போல அன்பும் இனிமையும் பெய்த முகத்தோடு அவளது கன்னத்தைத் தடவிக் கொடுத்து, “அம்மா உடம்பு இப்போது எப்படி இருக்கிறது? இன்னமும் மயக்கமாக விருக்கிறதா?” என்று கேட்டாள்.

உடனே மேனகா ஏதோ வார்த்தை சொல்லத் தொடங்கினாள்; ஆனால், அவள் பேசியது ஒருவன் கிணற்றுக்குள்ளிருந்து பேசுதலைப்போல விருந்தது. “அம்மா! நான் ஏதோ உடம்பு அசெளக்கியப்பட்டுக் கிடப்பதாய்த் தெரிகிறது. நீ என் விஷயத்தில் காட்டும் அந்தரங்கமான அன்பையும், படும் பாடுகளையும் காண என் மனம் உருகுகிறது. என்னைப்பெற்ற தாய்கூட இவ்வளவு அருமை பாராட்டிக் காப்பாற்றுவாளோ வென்ற சந்தேகம் உதிக்கிறது. நீ மகா உத்தமியென்பதை உன் முகமே காட்டுகிறது. ஆகையால், உன்மேல் எவ்விதமான சந்தேகங் கொள்ளவும் என் மனம் இடந்தரவில்லை என்றாலும் சில விஷயங்களை அறிந்து கொள்ள என் மனம் மிகவும் ஆவல் கொண்டிருக்கிறது. தயவு செய்து நான் கேட்பதைத் தெரிவிப்பாயா?” என்றாள். உடனே நூர்ஜஹான் முகமலர்ச்சி யடைந்து, "எல்லா விஷயங்களையும் சந்தோஷமாகத் தெரிவிக்கிறேன். எதை வேண்டுமானாலும் கேட்கலாம்” என்று கூறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/5&oldid=1252084" இலிருந்து மீள்விக்கப்பட்டது