உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

மேனகா

உணராதவளாயும் உட்கார்ந்திருந்தாள். சாமாவையர் மாத்திரம் விவரிக்கவொண்ணாத ஏதோ ஒருவித சங்கடமடைந்தவராய் அவ்வளவு இரமணியமான காட்சியினிடையில் பெருத்த வேதனை யடைந்தவரா யிருந்தனர்.

அந்த நிலைமையில் வண்டி அடுத்த ஊரை அடைந்து நின்றது. அப்போது மணி பதினொன்றாதலால், ஒருவரும் வண்டியில் ஏறவில்லை. ஸ்டேஷன் மாஸ்டர் போர்ட்டர் முதலியோர் கண்களை மூடித் துயின்று கொண்டே தமது வேலைகளைச் செய்தனர். ஆனால், அவ்வூரில் முதல்தரமான நல்ல பெங்களுர் கமலாப்பழம் விற்றது. வண்டியிலிருந்து கமலாக்கனிக் கருகில் செல்லவேண்டுமென்னும் நினைவைக் கொண்ட சாமாவையர் வெளியில் விற்கப்பட்ட கமலாப் பழத்தை வாங்க வெண்ணினார். “அடே கமலா இங்கே கொண்டுவா” என்று சொல்லிக்கொண்டே எழுந்து வாசற் கதவண்டை ஓடிவந்தார். அந்தப் பெண் உடனே தனது கால்களை மேலே வாங்கிக் கொண்டு அவருக்கு நெடுந்துரத்திற்கு அப்பால் மரியாதையாக விலகிக்கொண்டு சாய்மானப் பலகையோடு ஒட்டிக் கொண்டாள் என்றாலும் அவள் மீது கமழ்ந்த மல்லிகை, ரோஜா, முதலிய அரிய மலர்களின் நறுமணமும், ஜவ்வாது கூந்தல் தைலம் முதலியவற்றின் பரிமள கந்தமும் ஒன்று கூடி அவரது நாசியில் புகுந்து, அவரைப் பரவசப்படுத்தி இன்பக்கடலி லாழ்த்தின. தாம் அவ்வளவு நெருக்கமாக அவளிடம் நின்றதைப்பற்றி அவர் ஒருவகை லஜ்ஜை அடைந்தார். அவளுடைய புதிய பட்டுப்புடவை சரசரவென்று ஒசை செய்ததும், கையில் அணியப்பட்டிருந்த பம்பாய் வளையல்கள் கலகலவென்று ஒலித்ததும் சங்கீத ஓசையைப்போல அவர் மனதில் பாய்ந்து இன்பமும் துன்பமும் உண்டாக்கின. அவள் மீதிருந்த குற்றமற்ற ஒவ்வொரு சிறிய பொருள்கூட, அவளுடன் சேர்ந்து கொண்டு அவர் கமலாப்பழக்காரனை அமர்த்தலாக அழைத்து,-“அடே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/52&oldid=1251883" இலிருந்து மீள்விக்கப்பட்டது