உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலையாள பகவதி

57

வெளியில் விடுத்து, சுளைகளைக் தின்ன ஆரம்பபித்தாள். ஆனால், வாயில் போட்டுக் கொண்டதும், மென்றதும், விழுங்கியதும் வெளியில் தெரியாமல் அவ்வளவு மறைவாகக் காரியத்தை நடத்தினாள். இரண்டொரு நிமிஷத்தில் பழம் தீர்ந்துபோன தாகையால், உட்புறம் சிரத்தை வாங்கிக் கொண்டாள். அதற்குள் சாமாவையர் மூன்று பழங்களை ஒழித்துவிட்டார். உட்புறம் திரும்பிய பெண்ணைப் பார்த்து, “பழம் ருசியாக விருக்கிறது. இன்னொன்று சாப்பிடு” என்று தனது கையிலிருந்த பழத்தை நீட்ட, அவள், “வேண்டாம் வேண்டாம்; அப்புறம் ஆகட்டும்; இன்னம் நாம் நெடுந்தூரம் போக வேண்டும்” என்று உறுதியாகக் கூறி மறுக்க, அவள் திரும்பவும் எடுத்துக் கொள்வதாக வாக்களித்ததை உத்தேசித்து, சாமாவையர், மேலும், அவளை வற்புறுத்தாமல் தமது கையை இழுத்துக்கொண்டார். பழத்தைப் பற்றிய உபசரணை அவ்வளவோடு நின்றது.

பிறகு ஐயர் திடீரென்று எதைக் குறித்தோ நினைத்துக் கொண்டவரைப்போல, தமது பையைத் திறந்து தடபுடலாக அதன் உட்புறமெல்லாம் சோதனைசெய்தார். அங்கு பார்த்தார்; இங்கு பார்த்தார். அவர் எதைத் தேடுகிறாரென்பதை அறிந்து கொள்ளும் எண்ணத்துடன் பெண்மணியும் அவர் செய்ததைக் கடைக்கண்ணால் உற்று நோக்கியவாறிருந்தாள். அடுத்த நிமிஷம் அவர், “பைத்தியக்காரன்; முக்கியமான சாமானை வைக்க மறந்துவிட்டான். வேலைக்காரப் பயல்களெல்லாம் முட்டாள்கள்; வெற்றிலைப் பெட்டியை வைக்க மறந்து போக வேண்டாமென்று ஆயிரந்தரம் சொன்னேன். அதை வைக்க மறந்தே போய்விட்டான்” என்று தமக்குத் தாமே கூறிக்கொண்டு அதிருப்தியாகப் பையைப் பூட்டினார். அதைக் கேட்ட மடந்தை தனக்கருகிலிருந்த அழகிய வெற்றிலைப் பெட்டியை எடுத்து அவரிருந்த பலகையில் மெல்ல வைத்து, “இதில் நிறைய வெற்றிலை இருக்கிறது. போட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/59&oldid=1251894" இலிருந்து மீள்விக்கப்பட்டது