உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

மேனகா

சொன்னதை மறந்துவிட்டேன்” என்றார். அதுவே குதபகாலம். ஏனெனில் அவரது வலது பாதத்தின் விரல்கள் அந்த வடிவழகியின் மிருதுவான விரல்களை முத்தமிட்டு அவைகளோடு உறவாடின. ஆகா! இமைப்பொழுதில் மின்சார சக்தி பரவுதலைப் போல அவரது பாதத்தின் வழியாக ஆநந்த வெள்ளம் பரவி அவரது சிகையை உலுக்கியது. மயிர் பொடித்தது. தேகம் பரவசமடைந்தது. தாம் ஜென்ம மெடுத்த நாள் முதல் அதுவரையில் தாம் அத்தகைய இணையற்ற சுகத்தை அடைந்ததே இல்லையென்று ஐயர் நினைத்து அளவளாவினார். தமது கால் தீண்டியது குறித்து அந்தப் பூங்கோதையின் முகத்தில் கோபக்குறி உண்டானதோ வென்பதை அறிய வெண்ணி அவளது வதனத்தை அவர் உற்று நோக்கினார். அது காறும் ஜ்வலித்துவந்த மகிழ்ச்சியே அப்போதும் மாறுபடாமல் தாண்டவ மாடியது. முகம் முன்னிலும் அதிகமாக நெகிழ்ந்து உருக்கத்தைக் காண்பித்தது. அதைக் கண்ட ஐயரது மனதில் பெரிதும் துணிவுண்டாயிற்று. என்றாலும், விவரிக்க இயலாத அச்சம் ஒரு புறம் அவரைப் பின்புறம் இழுத்துக்கொண்டே இருந்தது. தேகமோ கட்டினில் நில்லாமல் தடுமாறியது. அதற்குமேல் என்னவிதமாக மொழிவதென்பதை யறியாமல் அவர் தயங்கினார். அவளது விஷயத்தில் தாம் கொண்டுள்ள எண்ணத்தை இனி வெளிப்படையாகக் கூறுவதைத் தவிர, சொல்வதற்கு வேறொன்றும் இருப்பதாக அவருக்குத் தோன்றவில்லை. அவள் குடும்ப ஸ்திரீயா அல்லது தாசியா என்னும் சந்தேகம் எழுந்து அவரை உலப்ப வாரம்பித்தது. ஆனால், அதை அவளிடம் கேட்கவும் அஞ்சினார். அவள் தாசியாயிருந்தால், இன்னமும் தாராளமாகவும், சிறிதும் நாணமின்றியும் இருப்பதன்றி தான் தாசி என்பதை நன்றாகக் காட்டிகொள்வாள். கலியாண மாகாத குடும்ப ஸ்திரீயா யிருந்தால், அவள் தனிமையில் வந்திருக்க மாட்டாள். அன்னியப் புருஷனோடு இரவில் அவ்வாறு பழகியுமிருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/61&oldid=1251896" இலிருந்து மீள்விக்கப்பட்டது