உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலையாள பகவதி

77


கமலம்:- “அது இன்றைக்கு மாத்திரந்தானா அல்லது எப்போதும் நீடித்திருக்குமா? கையிலோ நாகைப்பட்டணத்துக்கு டிக்கட்டு இருக்கிறது; விடியற்காலம் ஐந்து மணிக்கு இதெல்லாம் பழைய கதையாகிவிடும். நமது நட்பு ஒரு ராத்திரியோடு மறைந்து போகும் கனவாயிருந்தால், அதற்கு என்னுடைய தாயார் சம்மதிக்கமாட்டாள். எத்தனையோ பெரிய மனிதருடைய பிள்ளைகளுக்கு என்னைக் கட்டிக் கொடுக்கும்படி கேட்டார்கள். ஆனால், அவர்கள் ஒருவர் மேலும் என் மனம் செல்லவில்லை. இன்று தாங்கள் என் புத்தியையும் கெடுத்து இப்படி பைத்தியம் பிடிக்கச் செய்துவிட்டீர்கள். இனி உங்களை விட்டுப் பிரிந்து நான் ஒரு நிமிஷமும் உயிரை வைத்துக் கொண்டிருக்க முடியாது; நீங்கள் இப்படி விடியற்காலம் போய் விடுவீர்கள் என்பதை உணர்ந்திருந்தால், தங்கள் முகத்தையே நான் பார்த்திருக்க மாட்டேன்” என்று கூறினாள். அப்போது தண்ணீர்க் குழாய் திறக்கப்பட்டவாறு அவளது இரு கண்களிலும் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. நெடுமூச்செறிந்து தேம்பித்தேம்பியழ ஆரம்பித்தாள். அதைக் கண்ட சாமாவையரது தேகம் பதறிப்போனது. தமது முழு அன்பையும் காட்டி அவளை அருகில் இழுத்து இருகைகளாலும் அணைத்து, தமது வஸ்திரத்தால் அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டு, “கமலம்! பயப்படாதே; உன்னை நான் இன்றோடு விட்டுவிடுவே னென்று நினைக்காதே; உன் தலையில் அடித்துச் சத்தியம் செய்கிறேன், இனி நீயே என் எஜமானி; என்னுடைய செல்வத்தை உன்னிடம் ஒப்புவித்து விடுகிறேன். நீயும் நானும் எப்போதும் இணைபிரியாதிருந்தே நம்முடைய நாட்களை நாம் சுகமாய்க் கழிக்கவேண்டும். நாகைப்பட்டணத்தில் இருக்கும் ஒரு கப்பல் வியாபாரிக்கு பட்டணத்தில் ஒரு பங்களாவிருக்கிறது; அதை நான் விலைக்கு வாங்கப் போகிறேன்; நாளையதினம் தஸ்தாவேஜை முடித்துவிடுவதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/78&oldid=1251915" இலிருந்து மீள்விக்கப்பட்டது