உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

மேனகா

உண்மைதானென்று வக்கீலின் அக்காள் சொன்னாள்; அவர்களுக்கு நண்பரான அடுத்த வீட்டு சாமாவையரும் அதற்கு அநுகூலமாக வாக்குமூலம் கொடுத்தார். இருவரின் வாக்குமூலங்களையும் டிப்டி கலெக்டர் கையெழுத்தையும் இன்று நாங்கள் தஞ்சாவூர் கலெக்டருக்கு அனுப்பிவிட்டோம்.

பெரிய:- (பெரிதும் வியப்படைந்து) என்ன ஆச்சரியம் ஒரே அம்பினால் இரண்டு பட்சிகளைக் கொன்றிருக்கிறார்களே! மூளை இருந்தாலும் இப்படியல்லவா இருக்கவேண்டும்; கடிதங்களை எழுதி இங்கே வைத்துவிட்டு, தஞ்சாவூர் கலெக்டருக்கும் எழுதி யிருக்கிறார்கள் போலிருக்கிறது! இந்த மாதிரியான அற்புதத்தை நான் இதுவரையில் காதாலும் கேட்டதில்லை; பலே! பலே! (சிறிது மெளனம்) அதிருக்கட்டும்; வராகசாமி ஐயங்கார் மோட்டார் வண்டியில் அறைபட்டு வைத்தியசாலையிலிருப்பது உமக்குத் தெரியுமா?

சஞ்சீ:- தெரியும், அதையும் சாமாவையரிடம் கேள்விப் பட்டேன். மாமனாரின்மேல் கோபமாக வக்கீல் கடற்கரைக்குப் போனபோது வண்டி ஏறிவிட்டதென்று சாமாவையர் சொன்னார்.

பெரிய:- ஒகோ! உம்மிடம் ஒருவிதமாகவும், டாக்டர் துரைஸானியிடம் வேறுவிதமாகவும் சொல்லி யிருக்கிறாரோ! சரிதான்; எல்லாம் பொருத்தமாகத் தானிருக்கிறது. அது இருக்கட்டும். உம்மிடம் நான் சில ரகசியங்களைத் தெரிவிக் கிறேன்; ஆனால், நான் உத்தியோக முறையில் அவைகளைத் தெரிவிக்கவில்லை. உம்மை ஒரு நண்பராக மதித்து உம்மிடம் விஷயங்களைச் சொல்லுகிறேன். நீர் எனக்குச் சில உதவிகள் செய்ய வேண்டும். செய்வீரா?

சஞ்சீ:- கேவலம் சேவகனான என்னைத் தாங்கள் இவ்வளவுதூரம் மதித்து அழைத்து, சரிசமமாக உட்காரவைத்து உத்தரவு கொடுப்பதைப் பெருத்த அதிர்ஷ்டமாகவே நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/95&oldid=1251966" இலிருந்து மீள்விக்கப்பட்டது