பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெளனப் பிள்ளையார் 5 நான் இந்தக் காட்டிலேயே வளர்ந்தவன். இந்த அரச மர்த்தை யும் கல்லுப் பிள்ளையாரையும் விட்டு விட்டா என்னை வரச் சொல்கிறீர்கள் ? என்னுல் இவைகளை விட்டு ஒரு கணமும் பிரிந்திருக்க முடியாது !' என்று கண்டிப்பாகக் கூறிஞன். வந்தவர்கள் எவ்வளவோ கேட்டுக்கொண்டும், அப்பாசாமி ஒரே பிடிவாதமாகப் பானுவையும் அனுப்ப முடியாதென்று கூறிவிட்டு, ராஜூ, ராஜூ, நீ போகிருயா ? என்று தழு தழுத்த குரலில் கேட்டான். ராஜூ ஒன்றும் புரியாமல் அரை மனத்துடன் தலையை ஆட்டின்ை. பொழுது விடிந்ததும், வந்தவர்கள் ராஜுவை அழைத் துக்கொண்டு புறப்பட்டுச் சென்ருர்கள். - பானுமதி ராஜாவைப் பிரிந்த துக்கத்தால் கோவென்று அழுதாள். அவள் ராஜூவிடம் வைத்திருந்த அன்பைக் கண்டு அப்பாசாமி அதிசயித்து அவளுக்கு ஆறுதல் கூறினன் . பானுமதி இரவில் துரங்கும்போதெல்லாம், ராஜூ, ராஜூ என்று பிதற்றிஞள். - - இவ்வளவையும் பார்த்துக்கொண்டு அந்த அரசமரத்துப் பிள்ளையார் மட்டும் மெளனமாகவே இருந்தார். 铬 பல வருஷங்களுக்குப் பின்னர் அந்தக் காட்டு வழியாக வண்டிகளின் நடமாட்டம் சிறிது அதிகமாயிற்று. பொழுது போனபிறகு வரும் வண்டிகள் மட்டும் அப்பாசாமியின் குடிசையண்டைத் தங்குவது வழக்கமாயிற்று. அப்படித் தங்குகிறவர்களுக்கெல்லாம் பானு வேண்டிய உதவிகளைச் செய்தாள். அடுப்புப் பற்றவைத்துக் கொடுப்பாள்: ஜலம் பி டி த் து வருவாள். தேவையானவர்களுக்குச் சமைத்துப் போடுவாள். பானுமதிக்கு வயது வந்தவுடன் அப்பாசாமிக்குப் பாதி வேலைகள் குறைந்தன. முக்கியமாகச் சமைத்துச் சாப்பிட வேண்டிய சிரமம் நீங்கிற்று. பானுமதி இப்போது முன்னேவிட அழகுடன் விளங்கிளுள். நகைநட்டு இல்லாம லிருந்ததே அவளுக்கு ஒர் அழகாயிருந்தது. - - சில தினங்களுக்கெல்லாம் அந்த வழியாகத் தினசரி ஒரு பெரிய மோட்டார் லாரி வர ஆரம்பித்தது. சரியாக இரவு