பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஜ கீ த ம் பாஸ்கரனை எப்படி வேண்டுமானலும் கூப்பிடலாம். அவன் தகப்பனர் அவனை, 'ஏ கழுதை, இங்கே வா என்று அழைப்பார். அவனுடைய நண்பர்கள் அவனைப் பல மிருகங் களின் பெயர்களைக் கொண்டு கூப்பிடுவார்கள். யார் எப்படி அழைத்தபோதிலும் பாஸ்கரன் மட்டும் கோபிப்பதே கிடையாது. இன்னும் சொல்லப்போனல் அவர்களெல்லாம் அவனே, கழுதை, நாய் ' என்று அழைப்பதே அவ னு க் கு ப் பெருமையா யிருந்தது. அவனுடைய பெ ரு ைம க் கு க் காரணம் உண்டு. நாயைப்போல் குரைப்பான் ; சிம்மத் தைப்போல் கர்ஜிப்பான். இன்னும் எந்தெந்த மிருகம் எப்படி எப்படிக் கத்துகிறதோ, எந்தெந்தப் பட்சி எவ்வெவ் விதம் சப்திக்கின்றனவோ அப்படி யெல்லாம் தத்ரூபமாகச் செய்து காட்டுவான். இந்த அதிசய வித்தையை அவன் தானகவேதான் கற்றுக் கொண்டான். இந்தக் குணம் அவனுக்குப் பிறவியிலேயே அமைந்திருந்தது. அதனுல்தான் அவனை எ ல் லே ாரு ம்: "கழுதை, நாய் ' என்றெல்லாம் பட்டம் சூட்டி அழைத் தார்கள். - அதற்காகவே பாஸ்கரனுக்கு ஒரு சமயம் அவன் பள்ளிக் கூடத்தின் வருஷாந்திர விழாவின்போது ஒரு வெள்ளிக் கோப்பையைப் பரிசாக அளித்தார்கள். -

. אל சென்ற வருஷம் பாஸ்கரன் மேற்கொண்டு படிப்பதற் காகச் சென்னைக்கு வந்தான். தனியாக வாடகைக்கு ஒரு ரூம் எடுத்துக்கொண்டு படிக்க விரும்பினன். ஓர் அறைக் காகச் சென்னை நகரத் தெருக்களைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித் தான். கடைசியாகப் புரசைவாக்கத்தில் ஓர் இடம் கிடைத் தது. அது அந்த வீட்டு மேல்மாடியில் தெற்கு நோக்கிய அறை.