பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மெளனப் பிள்ளையார் வேண்டும். இன்னும் மாதத்தில் பதினைந்து நாள் தெருவில் விளக்குப் போட வேண்டும். நாங்கள் பதினைந்து நாள் போடு வோம். சரிக்குச் சரியா போயிடும். கிருஷ்ண பrம் பூராவும் நீங்கள் விளக்குப் போடுங்கோ: சுக்லபக்ஷம் பூராவும் நாங்கள் போட்டுவிடுகிருேம். தெரிந்ததா ? இதைத் தவிர்த்து உங்க களுக்குத் தனியாக ஓர் வெந்நீர் அறை உண்டு. அதை நீங்கள் உபயோகித்துக் கொள்ளலாம். கூடத்துச் சுவரி லேயோ, உள் கவரிலேயோ, ஆணி கீனி அடிக்கப்படாது. வீட்டைக் கண்ணுடி மாதிரி வைத்துக்கொள்ள வேண்டும். தெரிஞ்சுதா ?' என்று வழக்கப்படி ஒரு குட்டி .ெ ல க் சர் அடித்து முடித்தேன். இந்த லெக்சரை ஒண்டுக் குடித்தனக் காரரிடம் ஒப்புவிப்பதற்காகப் பாடம் பண்ணி வைத்திருக் கிறேன். இதுவரையில் வந்தவர்கள் என் பிரசங்கத்தைக் கேட்டுவிட்டு, நாளைக்கு வருகிறேன் என்று போய் விடு வார்கள். ஆளுல் போனவர்கள் திரும்பி வருவதில்லை. இந்த நபரோ என் பிரசங்கத்துக்குச் சிறிதும் சளைக்கவில்லை. சரி, பரவாயில்லை; கூரையில் ஒட்டடை, சிலந்திப் பூச்சிக் கூடு இதெல்லாம் இருக்கே, வாரத்திலே ஒருநாள் இதெல்லாம் பழுது பார்க்கவேண்டும் ஸ்ார். இப்படி வீட்டை வைத்துக்கொண்டிருந்தால் யார் வருவார்கள் ? என்று எனக்கு அவர் பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். 'அதைப்பற்றிக் கவலை வேண்டாம். நீங்கள் இங்கு வரும் பrத்தில் அதையெல்லாம் சுத்தப்படுத்தித் தருகிறேன்' என்றேன். - வீடு ஒழுகும் போலிருக்கே?' என்ருர். 'ஒழுகவாவது? அப்படி ஒழுகினலும் நான் ரிப்பேர்’ பண்ணித் தருகிறேன். கவலைப்படாதீர்கள்’’ என்றேன். 'புகை போக்கியிலே ஒரே கரியாயிருக்கிறதே?’’ அதுவும் கிளின் பண்ணிக் கொடுத்து விடுகிறேன்.' 'அதெல்லாம் இருக்கட்டும், வீ ட் டி லே குழாய் உண்டா ?’ என்ருர், *