பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மெளனப் பிள்ளே யார் ஒரு வேளை, இவள் மிஸ் மோகினியாயிராவிட்டால், என்ன செய்வது ?’ ’ 妾 மிஸ் கே. பி. மோஹினி அநேக தமிழ்ப் படங்களில் நடித்துப் பிரசித்தி அடைந்திருந்தாள். மிஸ் மோஹினி நடித்த படம் வந்ததென்ருல், நாகராஜன் குறைந்த பக்ஷம் நாலு தடவையாவது பார்க்காமல் விடுவதில்லை. அவன் தயாரித்து வைத்திருக்கும் எலினிமா ஸ்டார் போட்டோ ஆல்பத்தின் முதல் பக்கத்தில் மிஸ் மோஹினியின் படத் தைத்தான் ஒட்டி வைத்திருக்கிருன். மிஸ் மோஹினி என்ருல் அவனுக்கு அவ்வளவு உயிர் ! அவளுடைய கை யெழுத்து தன் வசம் இல்லாத குறை ஒன்றுதான் அவனே வெகுநாளாக வாட்டி வந்தது. அதற்கும் இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்து விட்டது. நாகராஜன் பகவானை வாயார வாழ்த்தி மனமாரப் புகழ்ந்து, கடவுளே, இவள் மிஸ் கே. பி. மோஹினியா யிருக்கட்டுமே !' என்று வேண்டிக் கொண்டான். எதற்கும் அவளேயே கேட்டு விடுவதுதான் புத்திசாலித் தனம் என்று தீர்மானித்து நாகராஜன் தைரியமாகக் காரின் சமீபத்தில் நெருங்கி, ' தாங்கள்தானே மிஸ் கே. பி. மோஹினி...... ’’ என்று கேட்டவாறே தன் சட்டைப் பையி விருந்த ஒரு நோட்டுப் புஸ்தகத்தை எடுத்தான். அதை அவள்முன் நீட்டி, ஒரு கையெழுத்து ' என்று கெஞ்சிப் பேணுவைக் கொடுக்கப் போனன். காரிலிருந்த ஸ்திரீ அவனை அலகதியமாகப் பார்த்து, *' u !rrri ?...... ’’ என்று கம்பீரமாகக் கேட்டாள். கே. பி. ம்ோஹினி...' என்று நாகராஜன் ஓர் அசட்டுச் சிரிப்புடன் இழுத்தான். இதற்குள் அவனுடைய கையும் பின்னுக்கு இழுத்துக்கொண்டது. காரிலிருந்த ஸ்திரீக்கு இதைக் கண்டதும் சிரிப்பு வந்து விட்டது. அதை ஒருவாறு அடக்கிக்கொண்டு ஒரு வினி